சேப்பாக்கம் தொகுதி என் மனைவி கைக்கு சென்றுவிட்டது – உதயநிதி ஸ்டாலின்

இந்த செய்தியை பகிருங்கள்

சென்னையை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கழிப்பறை திருவிழாவை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கழிப்பறைத் திருவிழா 2022 மயிலாப்பூரில் உள்ள தனியார்ப்பள்ளியில் இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இறுதி நாளான இன்று சென்னை மக்களின் பயன்பாட்டிற்காக கக்கூஸ் செயலியை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சென்னை மேயர் ப்ரியா ராஜன் இயக்குநர் கிருத்திகா உதயநிதி, துணைமேயர் மகேஷ் குமார் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த செயலியை பதிவிறக்கம் செய்தால் நாம் இருக்கும் இடத்தின் அருகாமையில் உள்ள சுமார் 25 பொதுக் கழிப்பறைகள் தெரிய வரும். அவற்றின் சுத்தம், பராமரிக்கப்படும் விதம் அனைத்தும் செயலியின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

இந்நிகழ்வில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் உதயநிதிஸ்டாலின், “இங்கு வந்துள்ள தூய்மைப் பணியாளர்களே உங்கள் பணிக்காக உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன். பெண்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த கக்கூஸ் செயலி பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். சென்னையில் மூன்று நாட்களில் 1460 கழிப்பறைகள் இந்த கக்கூஸ் செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அடுத்து தமிழ்நாடு முழுவதும் இந்த கழிப்பறை திருவிழாவை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். என்னை விட என் மனைவி தான் சேப்பாக்கம் தொகுதியை பார்வையிட அதிகம் செல்கிறார். இதை பார்த்தால் என் தொகுதி மாறிவிடும் போல…” என்று நகைச்சுவையாக பேசினார்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us