சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகை காலத்தில்இ மக்கள் பயணிக்கும் பேருந்து சேவைகள் தொடர்பாக 187 புகார்கள் தேசிய போக்குவரத்து ஆணையத்திற்கு (NTC) கிடைத்துள்ளதாக அந்த ஆணையத்தின் பணிப்பாளர் ஜெனரல் நவோமி ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
இதில் பெரும்பாலானது, 163 புகார்கள் பயணக் கட்டணங்கள் அரசால் அனுமதிக்கப்பட்ட அளவில் வசூலிக்கப்படாததையொட்டி எழுந்தவை எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், 1955 அவசர அழைப்பு இலக்கம் வழியாக டிக்கெட் வழங்காமை தொடர்பான புகார்களும் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இவை அனைத்தும் பண்டிகை காலத்திற்குப் பிறகு விரிவாக விசாரணை செய்து, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என NTC பணிப்பாளர் ஜெனரல் அறிவித்தார்.