செம்மணிப் பேரவலம்: அடுத்தக்கட்ட அகழ்வுப் பணிக்கு நிதி கோரி நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிப்பு!

செம்மணிப் பேரவலம்: அடுத்தக்கட்ட அகழ்வுப் பணிக்கு நிதி கோரி நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி விவகாரத்தில் அடுத்தகட்ட அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக, அதற்கான நிதி அறிக்கை நேற்று  நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் இந்த நிதி அறிக்கையை ஏற்றுக் கொண்டால், அக்டோபர் மாதம் 21 ஆம் திகதி அகழ்வுப் பணிகள் மீண்டும் தொடங்கும் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

235 எலும்புக் கூடுகள் மீட்பு!

இதுவரை இரண்டு கட்டங்களாக நடந்த அகழ்வுப் பணிகளில் மொத்தம் 240 மனித எலும்புக்கூடுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 235 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் அகழ்வு தேவை!

சமீபத்தில் அந்தப் பகுதியில் நடத்தப்பட்ட ஸ்கேன் ஆய்வில், மேலும் பல மனிதப் புதைகுழிகள் இருக்கும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை அகழ்வு செய்ய மேலும் எட்டு வாரங்கள் ஆகும் என, இந்த அகழ்வுப் பணியில் ஈடுபட்ட நிபுணர்கள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செம்மணிப் பேரவலம் குறித்த இந்த நீதி விசாரணை, தமிழர்களின் மனதில் இன்றும் ஆறாத வடுவாக உள்ளது.