தமிழக மக்களே…! இனி இதெல்லாம் கட்டாயமில்லை…. அரசின் அதிரடி அறிவிப்பு…!!!!

இந்த செய்தியை பகிருங்கள்

கொரோனா தொற்று வெகுவாக குறைந்ததை அடுத்து கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனினும் முக கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை தொடர்ந்து மக்கள் பின்பற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமணம், இறப்பு உள்ளிட்ட சுப, துக்க நிகழ்வுகள் உட்பட பல்வேறு செயல்பாடுகளுக்கு தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது.

இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பும் வெகுவாக குறைந்து விட்டதால், அதைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை சுயவிருப்பத்தின் அடிப்படையில் பின்பற்றிக்கொள்ளலாம் என்றும், பொதுமக்கள் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us