சின்ன வயதிலும் சின்னதில்லை சாதனை — U18 போட்டியில் தருஷி அபிஷேகா தங்க வெற்றி!

2025 ஆசிய U18 தடகளப் போட்டிகள் சவூதி அரேபியாவில் நடைபெற்று வரும் நிலையில், இலங்கையின் தருஷி அபிஷேகா பெண்கள் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்க பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்நிகழ்வில், தருஷி அபிஷேகா தனது சிறந்த ஓட்டத்துடன் எதிரிகளை பின்னுக்கு தள்ளி தங்க பதக்கத்தை கைப்பற்றினார்.

இதையடுத்து, சவிந்து அவிஷ்கா ஆண்கள் 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் 1:53.41 நிமிடங்களில் ஓடி வெண்கல பதக்கத்தை பெற்றார்.

மேலும், பவன் நேத்ய சம்பத் ஆண்கள் உயரம் தாண்டி பாய்தல் போட்டியில் 2.03 மீட்டர் உயரத்தை தாண்டி வெண்கல பதக்கத்தை வென்றார்.

இலங்கையின் இளம் தடகள வீரர், வீராங்கனைகள் ஆசிய மேடையில் பதக்கங்களை குவித்து, நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.