VP Vance Tells Russia and Ukraine to Strike a Deal: இல்லாட்டி நாங்க ஜெகா வாங்கிடுவோம்- வடிவேல் பாணியில் ..

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் தாமே பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும். இல்லையென்றால் நாங்கள் விலகி விடுவோம் என்று ஒரு கோமாளி போல அமெரிக்க துணை ஜனாதிபதி பேசியுள்ளார். இவரது பேச்சை கேட்டு சிரிப்பதா இல்லை அழுவதா என்றே தெரியவில்லை. ஏதோ சினிமாவில் வடிவேல் காமெடி பண்ணுவது போல அமைந்துள்ளது இவரது பேச்சு !

முதலில் ரஷ்யாவோடு பேசி, போர் நிறுத்தத்தை கொண்டுவருவதாக கூறினார் ரம். அதற்கு உக்ரைனிடம் உள்ள கனிம வழங்கள் தமக்கு தேவை என்றால். இதற்கு மூல காரணம் சீனா பல மாதங்களுக்கு முன்னர் அரிய கனிமங்களை அமெரிக்காவுக்கு கொடுப்பதை நிறுத்தி விட்டது. இதனால் மேற்கொண்டு ஏவுகணைகளை அமெரிக்காவால் தயாரிக்க முடியவில்லை. தேவையான உலோகங்களை அவர்களால் செய்ய முடியவில்லை. இன் நிலையில் ரஷ்ய அதிபர் இந்த அமைதி பேச்சு வார்தையை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

அமெரிக்க ஜனாதிபதி ரம் மற்றும் துணை ஜனாதிபதி பேசிய எதற்கும் புட்டின் ஒரு பதில் உரை கூட வழங்கவில்லை. இன் நிலையில் தன்னால் மட்டும் தான் போர் நிறுத்தத்தை கொண்டு வர முடியும் என்று பேசினார் ரம். ஆனால் தற்போதைய நிலையில், ஒன்றுமே வேலைக்கு ஆகவில்லை. இதனால் ரஷ்யா போரை நிறுத்தாது என்பது நன்றாகப் புரிந்து விட்டது.

தற்போது நீங்களாகவே பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று துணை ஜனாதிபதி பேசியுள்ள விடையம் ஒரு பெரும் கேலிக் கூத்து.