“மகளிர் மீதான தாக்குதலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குக”…. சிறப்பு நீதிமன்றம் அதிரடி….!!!!

இந்த செய்தியை பகிருங்கள்

மகளிர் மீதான தாக்குதலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னையில் காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்திய அரவிந்த் குமார் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில் பெண்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் இது போன்ற சம்பவங்களை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது.

காதலிக்க மறுக்கும் பெண்களின் மீதான தாக்குதல் சம்பவம் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது. பெண்கள் மத்தியில் எந்தவித அச்சத்தை ஏற்படுத்தும் சம்பவங்களை சகித்துக் கொள்ளக் கூடாது எனவும் சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us