GOAT உடன் மோதும் புஷ்பா பாகம் 2 யாருக்கு தில் இருக்கு விஜயுடன் மோத ? என்ன நடக்கப் போகிறது

GOAT உடன் மோதும் புஷ்பா பாகம் 2 யாருக்கு தில் இருக்கு விஜயுடன் மோத ? என்ன நடக்கப் போகிறது

தளபதி நடித்து வெளியாக உள்ள படம் GOAT, அந்தப் படம் ஆகஸ்ட் 15ம் திகதி வாக்கில் ரிலீஸ் ஆகும் என்று பேசப்பட்டு வந்தது. ஆனால் திடீரென்று புஷ்பா பாகம் 2 ஆகஸ்ட் 15 வெளியாகும் என்று, திட்டவட்டமாக படக் குழு அறிவித்துள்ளது. இதனால் GOAT படத்திற்கு பாதிப்பு ஏற்படுமா ? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. அல்லு அர்ஜுன் நடித்து பெரும் சக்கைப் போடு போட்ட படம் தான் புஷ்பா.

கோக்கா… கோக்கா பாடலே எத்தனையோ மில்லியன் ரசிகர்களை எட்டியது. இந்த நிலையில் தான் புஷ்பா படத்தின் பாகம் 2 வரும் ஆகஸ்ட் மாதம் 15 அன்று வெளியாக உள்ளதாக, உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் GOAT படம் நிச்சயம் ஆகஸ்ட் தான் வெளியாகும் என்று, இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்துவிட்டார். இதனால் தளபதி படமான GOAT படத்தை 15க்கு முன்னரே வெளியிட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

புஷ்பாவா ? இல்லை தளபதி விஜயா என்று கேட்டால், மக்கள் யார் பக்கம் என்பது அனைவரும் அறிந்த விடையம். தமிழ் நாடு மட்டும் அல்ல ஆந்திரா கேரளா தெலுங்கு என்று சகல இடங்களிலும் கொடி கட்டிப் பறப்பவர் விஜய். அவர் படம் என்றால் என்ன சும்மாவா ?