2nd UPdate: அமெரிக்கா கூட செய்ய தயங்கிய விடையத்தை இன்று உக்ரைன் செய்து காட்டியுள்ளது. : கார் குண்டு வெடிப்பில் இறந்தது , ரஷ்யாவின் ஜெனரல் தரத்தில் இருக்கும் மிக மிக முக்கிய தளபதி Yaroslav Moskalik என அதிர்வு இணையம் அறிகிறது. குண்டு தாக்குதலை நடத்தியது உக்ரைன் தான். இருப்பினும் உக்ரைன் எந்த ஒரு செய்தியையும் இதுவரை வெளியிடவில்லை. குறித்த ஜெனரல் ரஷ்ய படைகள், கேஷ் நகரை பிடிக்க திட்டம் தீட்டியவர் என்றும். அவரே 435 உக்ரைன் ராணுவத்தை வளைத்துப் பிடிக்க திட்டம் தீட்டியவர் என்றும் அறியப்படுகிறது. இதனூடாக உக்ரைன் தனது பழியை தீர்த்துக் கொண்டது மட்டுமல்லாது. ரஷ்யாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த முடியும் என்றும் காட்டியுள்ளது.
1st UPdate: இதுவரை ரஷ்ய உளவுப் பிரிவு மற்றும் ரஷ்ய ராணுவத்தால் செய்ய முடியாத ஒரு காரியத்தை உக்ரைன் செய்துள்ளது. சற்று முன்னர் மொஸ்கோ(ரஷ்ய தலை நகரில்) நடந்த பெரும் வெடிகுண்டு தாக்குதலில் ரஷ்யாவின் முக்கிய ராணுவத் தளபதி அவரது மெய் பாதுகாப்பாளர் என 4 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
இது ரஷ்யாவின் ராணுவ தலைமை நிலையம் முன்னால் நடந்தது, பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. இதே நிலமை நாளை புட்டினுக்கும் வரலாம் என்பதனை உக்ரைன் நன்றாக உணர்த்தியுள்ளது. இதனால் டொனால் ரம் முன்னெடுக்க இருந்த யுத்த நிறுத்த பேச்சுவார்த்தை முற்றாக தடைப்பட்டுள்ளது. மேலதிக செய்திகள் விரைவில் வரும், அதுவரை அதிர்வு இணையத்தோடு இணைந்திருங்கள் ! வீடியோ கீழே இணைப்பு !