உலக வல்லரசாக தன்னை காட்டிக் கொள்ளும் அமெரிக்கா கூட, ரஷ்ய மண்ணில் இப்படி ஒரு பெரும் தாக்குதலை இதுவரை நடத்தியதே இல்லை. அது போக ரஷ்யா தான் வழமையாக பல நாடுகளில், இது போன்ற சில தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஆனால் இன்று ரஷ்ய மண்ணில், அதுவும் தலை நகர் மொஸ்கோவில் வைத்து ரஷ்ய ஜெனரலை உக்ரைன் போட்டுத்தள்ளியுள்ளது.
இந்த சம்பவம் தற்போது உலகையே உலுக்கியுள்ளது. இதனால் ரஷ்யாவில் உள்ள ராணுவத் தளபதிகள் அனைவருக்கும் மற்றும் புட்டினுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட உள்ளதாக ரஷ்ய பாதுபாப்பு அமைச்சு சற்று முன்னர் அறிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று , ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்ய ராணுவத்தால் உக்ரைனுக்குள் இதுவரை ஊடுருவி எந்த ஒரு தாக்குதலையும் நடத்த முடியவில்லை. எல்லை ஓரங்களில் மட்டுமே தாக்குதல் நடத்துகிறார்கள்.
இந்திய பாணியில் சொல்லப் போனால், சர்ஜிக்கல் ஸ்ரைக் ஒன்றை உக்ரைன் மிகவும் நேர்த்தியாக கையாண்டுள்ளது. ரஷ்யாவில் இருந்து உளவுத் தகவல் கிடைக்காமல் இப்படி ஒரு தாக்குதலை திட்டமிட முடியாது. அப்படி என்றால் ரஷ்ய ராணுவத்தில் அதுவும் உயர் மட்டத்தில் யாரோ உக்ரைனுக்கு தகவலை கொடுத்துள்ளார்கள் என்பதே உண்மை. குறித்த ராணுவ ஜெனரலின் கார், அதன் நடமாட்டம். அவர் எங்கே செல்ல உள்ளார் என்பது எல்லாமே உக்ரைன் உளவாளிகளுக்கு தெரிந்துள்ளது.