சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஆக்சன் திரைப்படம் தான் அஞ்சான். இந்த திரைப்படம் அதிரடி தமிழ் திரைப்படமாக வெளிவந்தது. இயக்குனர் லிங்குசாமி இயக்கியிருந்த இந்த படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க இவருக்கு ஜோடியா சமந்தா நடித்திருந்தார்.
இவர்களுடன் பிரபல பாலிவுட் நடிகரான வித்யூத் ஜம்வால் நடித்திருந்தார். இவர்களுடன் சூரி, மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை கிளப்பி வேற லெவலில் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை கொடுக்கும் வகையில் அடர் பிளாப் ஆகிவிட்டது.
இன்று வரை அஞ்சான் படத்தை ட்ரோல் செய்பவர்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திறந்த இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களின் ஃபேவரிட் லிஸ்டில் இருந்தாலும் கூட படத்தை பலரும் கலாய்த்து தான் வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் படத்தின் தோல்விக்கான காரணம் குறித்து பேசி உள்ள அப்படத்தின் இயக்குனர் லிங்குசாமி,
அஞ்சான் திரைப்படம் வெளியாகி 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும் அஞ்சான் படத்தின் ட்ரோல்கள் குவியக் காரணம் அந்தப் படத்தை ஒரு குறுகிய காலகட்டத்தில் எடுத்து முடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.ஒரு படம் வெற்றியடைவதும் தோல்வியடைவதும் ஏவிஎம் டப்பிங் தியேட்டரில் இருந்து தியேட்டருக்கு செல்லும் கேப் தான். ஆம், இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு ஒரு சில விஷயங்களை செய்திருந்தால் நிச்சயம் அஞ்சான் சிறப்பாக வந்திருக்கும் என்றார். அஞ்சான் படத்தில் சில தேவையில்லாத காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை மீண்டும் ரீ எடிட் செய்து விரைவில் ரீ ரிலீஸ் செய்யப்போவதாக லிங்குசாமி அறிவித்துள்ளார்.