கடந்த வருடம்(2024) ஆகஸ்ட் மாதம், ரஷ்யாவுக்கு உள்ளே சுமார் 150மைல் தொலையில் உள்ள கேஷ் என்னும் பெரு நிலப்பரப்பை உக்ரைன் ராணுவம் கைப்பற்றியது. இந்த இடத்தில் ரஷ்ய ராணுவம் நிலைகொண்டு இருக்கவில்லை என்ற பல புலனாய்வுத் தகவலை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கி இருந்தது. இதனை அடுத்து குறித்த பெரு நிலப்பரப்பை உக்ரைன் படைகள் கைப்பற்றி தம் வசம் வைத்திருந்தார்கள்.
பல தடவை ரஷ்ய ராணுவம் அந்த கேஷ் நகரை மீண்டும் கைப்பற்ற முனைந்து பெரும் தோல்வியையும் இழப்பையும் சந்தித்தார்கள். இதனால் ரஷ்ய ராணுவம் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் இருந்தது. ஆனால் அமெரிக்க அதிபராக டொனால் ரம் வந்த பின்னர் அவர் கடந்த மார்ச் மாதம் , உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி வந்த புலனாய்வுத் தகவல்களை நிறுத்துவதாக பகிரங்கமாக மீடியாக்களில் அறிவித்தார்.
உடனே ரஷ்ய ராணுவம் உஷாராகி, ஒரு திட்டத்தை தீட்டியது. ஐரோப்பாவுக்கு செல்லும் எரிவாயு பைப் ஊடாக ராணுவத்தை அனுப்பி கேஷ் நகரை கைப்பற்ற திட்டம் தீட்டியது. ஆனால் அமெரிக்கா இப்படி ஒரு பிழையான தகவலை கொடுக்க, இதனை நம்பி ரஷ்ய ராணுவத்தை அனுப்பினால், பின்னர் பெரிய இழப்பு ரஷ்ய ராணுவத்திற்கு ஏற்படும் என்று ரஷ்யா அஞ்சியுள்ளது. இதனால் பலிகடவாக வட கொரிய ராணுவத்தை பைப் ஊடாக அனுப்பியுள்ளது ரஷ்யா.
இதனூடாக வடகொரியாவின் ராணுவத்தில் உள்ள பல நூறுபேர் ரஷ்யாவுக்காக போர் புரிந்து வருகிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இதனை ஏற்கனவே உக்ரைன், தெளிவு படுத்தி இருந்தது. ஆனால் நேற்றைய தினம்(26) சனி அன்று, ரஷ்ய அதிகாரிகள் , கேஷ் நகரை கைப்பற்றியது வட கொரிய துருப்புகள் தான் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்கள். இதனால் ரஷ்யாவின் கையாலாக தனம் வெளிப்படையாகவே உலக மக்களுக்கு புரிந்து விட்டது.
தற்போது உக்ரைன் படைகள், பல சீன ராணுவத்தினரை கைது செய்துள்ளார்கள். இதனூடாக சீனா கூட ரஷ்யாவுக்கு உதவுகிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ரஷ்ய ராணுவத்தில் , இந்தியர்கள், இலங்கையர்கள், வட கொரியர்கள், சீனர்கள், மற்றும் ஆபிரிக்க ஆண்கள் என்று பலர் உள்ளார்கள். இவர்கள் அனைவருக்கும் ரஷ்யா சம்பளம் கொடுக்கிறது. அந்த அளவு ரஷ்ய ராணுவம் நலிந்து உள்ளது.