லண்டனில் இந்திய மக்களுக்கு எதிராக பாக்கிஸ்தான் மக்கள் பெரும் போராட்டத்தில் இறங்கியுள்ளதால், பிரிட்டன் பொலிசார் பெரும் குழப்பத்தில் உள்ளார்கள். பிரச்சனை உச்சக் கட்டம் சென்றதால், கசாப்பு கடை நடத்தும் பாக்கிஸ்தான் குண்டர்கள், இந்திய மக்களுக்கு இறைச்சியை விற்க மாட்டோம் என்று அடம்பிடித்து வருகிறார்கள். அட என்ன தாண்டா, உங்க பிரச்சனை என்று கேட்டால், இந்திய தேசிய கொடியை எரித்தும் காலால் மிதித்தும் அடாவடியில் இறங்கியுள்ளார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், இந்திய அதிபர் மோடி, காஷ்மீர் செல்ல இருந்தார். அவரை அங்கே வைத்து போட்டு தள்ள முஸ்லீம் தீவிரவாத அமைப்புகள் முடிவு செய்து இருந்தது. பாக் ஆதரவு பெற்ற லக்ஷ்ர் ஈ தொய்பா தீவிரவாதிகள் AK47 ரக துப்பாக்கிகள் சகிதம் காஷ்மீரில் ஊடுருவி பதுங்கி இருந்தார்கள். இதேவேளை வழமைக்கு மாறாக ஒரு குறித்த அலை வரிசையில் (ரகசிய சமிஞ்சை) CODE WORDS ஊடாக தகவல் பரிமாறப்பட்டு வந்தது.
அலைவரிசையை அவதானித்த இந்திய புலனாய்வுத்துறை, அது நெடுந்தூரம் செல்லும் அலைவரிசை என்பதனை கண்டு பிடித்து விட்டார்கள். அது பாக்கிஸ்தான் வரை செல்லும் என்பது அவர்களுக்கு தெளிவாக புரிந்து விட்டது. இதனால் இந்திய புலனாய்வுத் துறை மத்திய அரசுக்கு அறிவிக்க, பிரதமர் மோடியின் காஷ்மீர் விஜயம் ரத்து செய்யப்பட்டது. இதனால் தமது திட்டம் காலியாகி விட்டது என்பதனை உணர்ந்த முஸ்லீம் தீவிரவாதிகள்.
உடனே திட்டத்தை மாற்றி, காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் இடத்தை குறிவைத்து தாக்கி 26 பேரைக் கொலை செய்தார்கள். இதனை அடுத்து இந்திய அரசு பாக் மக்களை இந்தியாவில் இருந்து 48 மணி நேரத்தில் வெளியேறுமாறு அறிவித்து, எல்லைகளை மூட்டி, சிந்து நதி நீரை பாக்கிஸ்தானுக்கு அனுப்பாமல் தடை செய்தது.
மேலும் சொல்லப் போனால், இந்தியா தனது ராணுவத்தை பாக்கிஸ்தானுக்குள் அனுப்பி, அங்கே உள்ள தீவிரவாதிகளை போட்டுத் தள்ள திட்டமும் தீட்டியுள்ளது. இதனால் பாக் மக்கள் , இந்தியர்கள் மேல் கடும் கோபம் அடைந்துள்ளார்கள். அதுவே லண்டனிலும் எதிரொலித்துள்ளது. பாக் மக்கள் இந்தியர்களுக்கு எதிராக , போராட்டம் நடத்த. இந்தியர்கள் பாக் மக்களுக்கு எதிராக போராட்டம் நடத்த, லண்டன் தற்போது லடாக் போல ஆகியுள்ளது. அதுவே உண்மை !