தனியாக நாற்காலியை போட்டு பேசிய தலைவர்கள்… நல்லது நடக்க உள்ளதா ?

1.4 பில்லியன் கத்தோலிக்க மதத்தவர்களின் ஒருமித்த தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ். அவரது மறைவு உலகை உலுகியுள்ள நிலையில். நேற்று நடந்த இறுதி நிகழ்வில் பல உலகத் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். இதில் அமெரிக்க அதிபர், மற்றும் உக்ரைன் அதிபர் கலந்துகொண்ட விடையம், அவர்களுக்கு இடையே திடீரென உண்டான நெருக்கம் என்பன உலகின் கவனத்தை பெரிதும் ஈத்துள்ளது.

இறுதி நிகழ்வுக்குச் சென்ற அமெரிக்க அதிபர் புட்டின், உக்ரைன் அதிபரை திடீரென கட்டித் தழுவினார். இதன் காரணம் உக்ரை ரஷ்யாவுக்கு உள்ளே ஊடுருவி நடத்திய தாக்குதல் தான் என்கிறார்கள் விடையம் அறிந்த வட்டாரத்தினர். ரஷ்ய ஜெனரை, உக்ரைன் கார் குண்டு வெடிப்பு மூலம் கொன்றுள்ளது. இதனை அமெரிக்கா சற்றும் எதிர்பார்கவில்லை.

இதனூடாக உக்ரைன் அதிபர் ஜிலன்ஸ்கிக்கு பெரும் மரியாதை கிடைத்துள்ளது. இந்த நிலையில் தான் அமெரிக்க அதிபர் ரம் , ஜிலன்ஸ்கியை சந்தித்துள்ளார். இருவரும் முட்டி மோதி வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள் என்று பார்த்தால். இருவரும் அருகே இருந்த நாற்காலியை எடுத்து போட்டு விட்டு பேச ஆரம்பித்து விட்டார்கள். அவர்களுக்கு இடையே எந்த ஒரு மொழி பெயர்பார்களும் இல்லை. அவர்கள் நன்றாகப் பேசி, தமது மனதில் உள்ள கருத்தை பரிமாறிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இனி என்ன நடக்க உள்ளது என்பது தொடர்பாக நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் !