இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமினை டெலிபோனில் தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர். சுமார் 1 மணி நேரமாகப் பேசியுள்ளார். உடனே போர் நிறுத்தம் ஒன்றை அறிவிக்குமாறு அவர் அறிவுரை கூறியுள்ளதோடு. போரை நிறுத்தாவிட்டால், அமெரிக்க ஆயுத உதவிகளை உடனே நிறுத்துவேன் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹமாஸ் இயக்கத்தை ஒரு பயங்கரவாத இயக்கமாக அறிவித்த இஸ்ரேல், அவர்களை அழிப்பதாக கூறி அப்பாவி பொதுமக்கள் மீது கடுமையாக தாக்கி வருகிறார்கள்.
இதனால் பாலஸ்தீன பொதுமக்கள் பலர் கொலைசெய்யப்பட்டுள்ளார்கள். இதனை மேற்கு உலக ஊடகங்களும் வெளியிடாமல் இருட்டடிப்பு செய்து வந்தது. ஆனால் இந்த ஊடகங்களுக்கே பெரும் சோதனை ஏற்பட்டது. காரணம் என்னவென்றால் கடந்த வெள்ளியன்று, உணவு கொண்டு சென்ற தொண்டு நிறுவன கார்கள் மீது, இஸ்ரேல் ட்ரோன் விமானம் கண்மூடித் தனமான தாக்குதல் நடத்தி, 7 பேரைக் கொன்றது. இதில் 3 பேர் பிரித்தானிய பிரஜைகள்.
இதனால் அனைத்து மேற்கு உலக மீடியாக்களும் இஸ்ரேலுக்கு எதிராக திரும்பியுள்ளது. இதனை அடுத்து பிரிட்டன் பிதமர் ரிஷி, இஸ்ரேலிடம் விளக்கம் கோரினார். ஆனால் இதுவரை இஸ்ரேல் எந்த ஒரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை. இதனை அடுத்தே அமெரிக்க அதிபர் பைடன் இந்த விடையத்தில் தற்போது தலையிட்டு, இஸ்ரேலை கட்டுப்பாட்டினுள் கொண்டுவர முனைந்துள்ளார். இறங்கி வருவாரா பெஞ்சமின் நித்தின்யாஹு ?