சைக்கிள் கேப்பில் தமிழர் பிரச்சனையை தூக்கிய பெண்- தமிழர்களே இனி சிங்கள மக்களும் இதனை தான் கையில் எடுப்பார்கள் !

இந்த செய்தியை பகிருங்கள்

கொழும்பில் நடைபெற்று வரும் பாரிய ஆர்பாட்டம் ஒன்றில், ஒரு பெண் மிகவும் துணிச்சலாக தமிழர்களுக்கு நடந்த கொடுமைக்கும் கோட்டபாய பதில் சொல்ல வேண்டும் என்ற பதாதையைப் பிடித்துள்ளார். இதனை சிங்கள மக்கள் பார்த்தும், எதிர்க்கவில்லை. காரணம் அவர்கள் கோபம் முழுக்க முழுக்க ராஜபக்ஷர்கள் மேல் தான் உள்ளது. இன்னும் சில நாட்களில் கோட்டபாய பதவி விலகா விட்டால். சிங்கள மக்களே அவர் மீது போர் குற்றத்தை திணித்து விடுவார்கள். இது நாள் வரை ராஜபக்ஷர்களை காப்பாற்றி வந்தது, இந்த சிங்கள மக்கள் தான். ஆனால் இன்று அவர்களே எதிராக திரும்பி, கோட்டபாயவை சர்வதேசத்திடம் பிடித்துக் கொடுத்து விடுவார்கள் போல இருக்கு. கையில் இந்த பதாதையை …

வைத்திருக்கும் பெண்ணைப் பார்த்தால், அவர் தமிழர் போல தெரியவில்லை. எனவே புலம் பெயர் தமிழர்கள் அமைப்புகள் கொஞ்சம் விரைந்து செயல்படுவது நல்லது. மதி நுட்பத்தை பாவித்து நாமும் காய் நகர்த்தினால் பல, வழிகள் பிறக்கும். இந்த கால கட்டத்தில் தமிழர்கள் தமக்கான அதிகார பகிர்வை பெற்றுக் கொள்ள , சரியான வாய்ப்பு தோன்றியுள்ளது. இலங்கையில் உள்ள மக்கள், கோட்டபாய வேண்டாம், ரணில் வேண்டாம் , சஜித்தும் வேண்டாம் என்கிறார்கள். அதனால் பட்டம் பெற்ற மாணவர்களை வைத்து நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகிறது. மருத்துவம் படித்த மாணவர் அல்லது மருத்துவரே சுகாதார துறை அமைச்சராக இருக்க வேண்டும். வணிகவியல் நிதி நிலை தொடர்பாக பட்டம் பெற்ற இளைஞரே, நிதி துறை அமைச்சராக இருக்கவேண்டும். இப்படி இருந்தால் தான் இலங்கை மீண்டு வரும். இப்படித் தான் மக்கள் பேசிக் கொள்கிறார்கள்… எனவே வெளிநாட்டுத் தமிழர்கள்…

இலங்கை அரசியலில் என்ன செய்ய முடியும் என்பதனை சற்று ஆராய்வது நல்லது. இது போல ஒரு தருணம் இனி வர வாய்ப்பு இல்லை.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us