கோமாளி சட்ட அமைச்சரை நிதி அமைச்சர் ஆக்கி, அவர் ராஜினாமா செய்ய மீண்டும் நிதி அமைச்சர் ஆக்கி… என்னடா….

இந்த செய்தியை பகிருங்கள்

அலி சபரி என்பவர் சட்ட துறை படித்த நபர், அவர் முன்னர் சட்ட அமைச்சராக பதவி வகித்தார். அவர் அந்த அமைச்சுக்கே லாயக்கு இல்லை என்ற நிலையில் இருந்த வேளை. அவரை திடீரென நிதி அமைச்சர் ஆக்கியுள்ளார் கோட்டபாய. அதே இரவு முழுக்க யோசித்த அலி சபரி, அடுத்த நாள் காலையில் தான் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதனால் பசிலை மீண்டும் நிதி அமைச்சராக்குவது என்று முடிவு செய்த கோட்டா தலையில் இடி இறங்கியது. பசில் நான் மாட்டேன் ஐயா என்னை விட்டு விடுங்கள் என்று கூறிவிட்டார். இதனால் அலி சபரியின் ராஜினாமாவை நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அதிபர் கோட்டபாய அறிவித்தார். மீண்டும் அலி சபரி என்ற கோமாளி நிதி அமைச்சர் ஆகியுள்ளார். இன் நிலையில் நாடு எப்படி உருப்படும் ? இப்படியான ஒரு…

இக்கட்டான ஒரு சூழ் நிலையில் கூட, கோட்டபாயவால் நல்ல முடிவை கூட எட்ட முடியவில்லை. மேலும் சொல்லப் போனால் எவரும் நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்க்க தயாராகவும் இல்லை. அப்படி என்றால், நிதி தொடர்பாக நன்றாக தேர்ச்சி பெற்ற நபர் ஒருவரை, ஆலோசகராக, நியமித்து இருக்கலாம். நாடு உருப்படுவது போல தெரியவில்லை.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us