இந்தியன் 2 ரிலீஸ் எப்போ தெரியுமா? சற்றுமுன் அதிரடி அறிவிப்பு!

இந்தியன்

பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தில் பல வருடங்களாக நடித்த வருகிறார். ஆம் இந்த படம் பல்வேறு சர்ச்சைகளிலும் , விபத்துகளிலும், பண பற்றாக்குறைகளிலும் தாமதமாகி தாமதமாகி தற்போது வரை இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. காரணம் இந்தியன் படத்தின் முதல் பாகத்தின் தாக்கம் தான் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்ப்போது படத்தின் ரிலீஸ் தேதி குறித்த லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் ஜூன் 13ம் தேதி வெளியாகவுள்ளதாக செய்திகள் கூறுகிறது. ஜூன் மாதம் ரிலீஸ் என அறிவித்துள்ள நிலையில், ஜூன் 13ம் தேதி சரியான ரிலீஸ் தேதி என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்தியன் முதல் பாகம் கொடுத்த எஃபெக்ட்டை இந்தியன் 2 படம் கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அத்துடன் இந்தியன் 3 திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இதை விட பெரிய சம்பவம் செய்யும் எனக் கூறுகின்றனர். இந்த தகவல் தற்ப்போது ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

இந்தியன்