இந்தியா, இலங்கை இரண்டும் இரட்டைச் சகோதரர்கள்…. கோபால் பாக்லே சொன்னது என்ன?…..!!!!!

இந்த செய்தியை பகிருங்கள்

இந்தியா மற்றும் இலங்கை இரட்டைச் சகோதரர்கள் என இலங்கைக்கான இந்தியதூதர் கோபால் பாக்லே தெரிவித்து உள்ளார். கொழும்புவில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தாஜ் சமுத்ரா நட்சத்திர விடுதியில் நடந்த இஃப்தார் விருந்தில் கோபால் பாக்லே பங்கேற்று இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில் வாழும் முஸ்லிம் தலைவர்கள் பல பேரும் இந்த விருந்தில் பங்கேற்று இருந்தனர்.

விருந்தினர்களில் இலங்கை நிதியமைச்சர் அலி சப்ரி, வங்கதேசத்துக்கான இலங்கை தூதர் தாரேக் மொஹம்மது அரிஃபுல் இஸ்லாம் மற்றும் அமைச்சர்கள், முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் என பெரும்பாலானோர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்தியதூதர் நாம் இருவரும் ஒருவருக்கொருவர் வெகு காலமாக உதவிகளை பரிமாறிக் கொள்கிறோம். இலங்கைக்கு அனைத்து அடிப்படையிலும் இந்தியா தொடர்ந்து உதவும் என தெரிவித்தார்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us