விஜய்க்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை, மத்திய அரசு உயர்த்த உள்ளதாக அமித் ஷா அலுவலக வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை அவருக்கு 11 பேர் கொண்ட குழு பாதுகாப்பை வழங்கி வந்தது. 9 பொலிசார் மற்றும் 2 ராணுவ கொமாண்டோக்கள் பாதுகாப்பை வழங்கி வந்த நிலையில். 12 பொலிசார் மற்றும் 4 கொமாண்டோ படையினர் கொண்ட குழு இனி பாதுகாப்பை வழங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ஆராய்ந்து உடனே தனக்கு அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு, அமித் ஷா பாதுகாப்பு துறைக்கு கட்டளை பிறப்பித்துள்ளார். அத்தோடு தமிழகத்தில் விஜய் பழிவாங்கப்படுவதாக, ஹெமமாலினி அடங்கிய நாடாளுமன்றக் குழு, அமித் ஷாவிடம் தெரிவித்துள்ளது. இது இவ்வாறு இருக்க மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் விஜய் பழிவாங்கப்படுவதாக மோடியிடம் தெரிவித்துள்ள நிலையில். ஆழும் திமுக அரசுக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது.
விஜயை திமுக அரசு கைது செய்வதை தடுக்க, அவருக்கு மத்திய அரசின் கூடுதல் பாதுகாப்பை வழங்க மோடி அரசு முடிவெடுத்துள்ளது. TVK தரப்பு மதுரை நீதிமன்றில் கரூர் சம்பவத்தை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று கூறி வழக்கை தொடுத்துள்ள நிலையில். மதுரை நீதிமன்றம் நிச்சயம் வழக்கை சி.பி.ஐக்கு மாற்றும் என்று எதிர்பார்கப்படுகிறது. அப்படி வழக்கு மாறினால், நிச்சயம் செந்தில் பாலாஜி சிக்குவார். அவரை கைதுசெய்து சிறையில் அடைத்தால் மட்டுமே போதும் , திமுகவுக்கு கிடைக்க வேண்டிய தேர்தல் பணம், கிடைக்காமல் போகும்.
இந்த வழக்கில் மேலும் சில பல திமுக முக்கியஸ்தர்கள் சிக்கினால், அவர்களையும் சி.பி.ஐ கைது செய்தால் திமுக கோட்டை ஆடிப்போய் விடும் என்பது மத்திய அரசின் கணக்காக உள்ளது. தமிழ் நாடையே சுரண்டி பெரும் ஊழலில் ஈடுபடும் திமுக அரசை ஓரம்கட்ட வேண்டும் என்று தமிழக மக்களே சிந்திக்க தொடங்கிவிட்ட நிலையில் , எதிர் கட்சிகள் என்ன வேடிக்கை பார்க்குமா ? இதேவேளை நாங்கள் ஆட்சியை கைப்பற்றாவிட்டாலும் பரவாயில்லை, திமுக வந்து விடக் கூடாது என்பதில் BJP மிகவும் தெளிவாக உள்ளதால், அவர்கள் TVK க்கு மறைமுக ஆதரவை வழங்கத் தொடங்கியுள்ளார்கள்.
ஆனால் BJP எமது கொள்கை எதிரி என்று பல தடவை விஜய் அவர்கள் கூறியுள்ள நிலையில் அவர் எப்படி BJP யுடன் கூட்டுச் சேர முடியும் ? இதனால் ஒரு பரஸ்பர புரிந்துணர்வில் இந்த 2 கட்சிகளும் செயல்பட்டு, முதலில் மக்கள் விரோத திமுகாவை களத்தில் இருந்து ஒதுக்கும் வேலையைச் செய்வார்கள் என்றே கூறப்படுகிறது.