சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 73 வயதாகும் அவரது தோற்றத்தில் கொஞ்சம் கூட வயது முதிர்ச்சி காட்டாத வகையில் அதிரடியான ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சான் பிச்சர்ஸ் கூட்டணியில் தலைவர் 171 படத்தில் நடித்து வருகிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கம் இப்படத்தில் வேலைகள் தற்போது துவங்க ஆரம்பித்துள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் நடிகர், நடிகைகள் தேர்வு முடிந்திருப்பதாக வெளிவரும் செய்திகள் கூறுகிறது. இந்நிலையில் இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக பிரபல நடிகை ஷோபா நடிக்கவுள்ளாராம்.
54 வயதாகும் நடிகை சோபா இன்னும் அழகு குறையாமல் அவ்வளவு அழகாக தோற்றமளிக்கிறார். இவர் குழந்தைகளை வைத்து பரதநாட்டியம் நடன நடன பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். அவ்வப்போது அதன் வீடியோக்களை கூட தன சமூக வலைதளத்தில் வெளியிடுவார்.
இந்நிலையில் ஷோபா ரஜினியுடன் மீண்டும் இரண்டாவது முறை நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆம் ஷோபா மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து மணிரத்தினம் இயக்கத்தில் தளபதி திரைப்படத்தில் நடித்திருந்தார்கள்.
கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் கழித்து இந்த ஜோடி மீண்டும் இணைகிறார்கள். ரஜினிகாந்த் தான் ஷோபா ஜோடியாக இந்த படத்தில் நடிக்க வேண்டும். அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என லோகேஷிடம் கூறினாராம். அதன் பின்னர் சோபாவிடம் தொடர்பு கொண்டு அவரை இந்த படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்திகள் கூறுகிறது