ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா நிச்சயதார்த்தம் முடிந்தது? ரகசிய விழாவால் ரசிகர்கள் உற்சாகம்!

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா நிச்சயதார்த்தம் முடிந்தது? ரகசிய விழாவால் ரசிகர்கள் உற்சாகம்!

தென்னிந்திய மற்றும் இந்திய சினிமாவில் பிரபலமான நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இடையேயான நீண்ட காலக் காதல் வதந்திகளுக்குத் தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இருவரும் குடும்பத்தினர் முன்னிலையில் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெலுங்கு ஊடகமான ‘ஃபிலிமி பீட்’ வெளியிட்டுள்ள இந்தத் தகவலின்படி, தசரா பண்டிகையை ஒட்டி ஒரு நல்ல நாளில் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த விழா மிகவும ரகசியமாகவும், தனிப்பட்ட முறையிலும் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. திரையுலகைச் சேர்ந்த நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர். இதன் மூலம், இந்த நட்சத்திர ஜோடி விரைவில் கணவன் மனைவியாக இணையத் தயாராகி வருகிறது.

‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் அகில இந்திய நட்சத்திரமாக மாறிய விஜய் தேவரகொண்டாவும், ‘நேஷனல் கிரஷ்’ ராஷ்மிகா மந்தனாவும் இணைந்து நடித்த ‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்தின்போதுதான் இவர்களது நட்பு காதலாக மாறியது. அதன்பிறகு ‘டியர் காம்ரேட்’ படத்திலும் இருவரும் நடித்தனர். பல ஆண்டுகளாக இவர்களது உறவு குறித்துப் பொதுவெளியில் கேள்விகள் எழுந்தபோதும், இருவரும் தங்கள் காதலை நேரடியாக உறுதிப்படுத்தாமல், மறைமுகமாகவே பதிலளித்து வந்தனர். தற்போது நிச்சயதார்த்தம் நடந்த செய்தி, அவர்களது உறவை உறுதிப்படுத்தியுள்ளது.

இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு இவர்களது திருமணத்தை விமர்சையாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் செய்தி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Loading