உயர் நீதிமன்ற நீதிபதி MK-ஸ்டாலினின் உற்ற நண்பர்- அவர் எப்படி TVK வழக்கை கையாள்வது ?

உயர் நீதிமன்ற நீதிபதி MK-ஸ்டாலினின் உற்ற நண்பர்- அவர் எப்படி TVK வழக்கை கையாள்வது ?

மதுரை மற்றும் சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அரசு தரப்பால் தொடரப்பட்ட வழக்கில், நீதிபதி செந்தில் குமார் அவர்களே நீதிபதியாக வந்துள்ளார். நீதிபதி செந்தில் குமார் என்பவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் உற்ற மற்றும் பிரத்தியேக நண்பர். அவர் TVK முக்கியஸ்தர்கள் கேட்ட முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததோடு , ஏன் விஜயை இன்னும் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியது பெரும் வேடிக்கையாக உள்ளது.

TVK தரப்பு வக்கீல் பேசும் போது எல்லாம் , “இது நீதிமன்றம் இங்கே அரசியல் பேச வேண்டாம் ” என்று செந்தில் குமார் பேசினார். ஆனால் பின்னர் அவரே … தலைவர் விஜய் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை ஏன் சென்று பார்கவில்லை ? இவர் என்ன மாதிரியான தலைவர் ? கூடிய கூட்டம் எப்படியான ஒரு கூட்டம் ? என்று எல்லாம் கேட்டு தானே அரசியல் பேசியுள்ளார். அது போக திமுகவுக்கு சார்பாக நேரடியாகவே நடந்துகொண்டுள்ளார்.

தமிழ் நாட்டில் என்ன தான் நடக்கிறது ? குடும்ப ஆட்சி தான் நடக்கிறது என்று பார்த்தால் பெரும் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. எப்படி என்றாலும் விஜயை ஓரம் கட்டி விடவேண்டும் என்று திமுக அரசு தனது அதிகாரத்தை கடுமையாக துஷ்பிரயோகம் செய்து வருவது பெரும் குற்றச்செயலாகும். அத்தோடு நீதிபதி வழக்கை சி.பி.ஐக்கு மாற்றவும் ஒப்புக்கொள்ளவில்லை.

கரூர் சம்பவத்தை விசாரிக்க தனி ஒரு நபர் கொண்ட விசாரணை கமிஷனை நியமித்தார் ஸ்டாலின். அவர் வேறு யாரும் அல்ல அருணா ஜெகதீஷன். இவர் ஸ்டாலின் நண்பர். திமுக எதனை எழுதிக் கொடுக்கிறதோ அதனையே தனது அறிக்கையாக வெளியிடக் கூடியவர் தான் இந்த அருணா. விசாரணைக் கமிஷன் தான் அப்படி என்றால், தற்போது நீதிபதி கூட, திமுக நீதிபதியாக இருக்கிறாரே. அப்படி என்றால் TVK தலைவர் விஜய்க்கு எப்படி நீதி கிடைக்கும் ? இந்த இடத்தில் விஜய் மத்திய அரசின் உதவியை நாடியுள்ளதை எவராலும் குற்றம் சொல்ல முடியாது.

இப்படி தான் இந்த வழக்கு போகப் போகிறது என்று 4 நாட்களுக்கு முன்னரே விஜய் உணர்ந்து கொண்டார். இதனால் தான் அவர் ஆதவ் அர்சுணாவை டெல்லிக்கு அனுப்பிவைத்துள்ளார். யார் இந்த ஆதவ் என்ற கேள்வி உங்களுக்கு எழும். ஆதவ் சமீபத்தில் தான் TVK கட்சியில் இணைந்துகொண்டார். அவரது மனைவி தான் டேய்ஸி மார்டின். இந்த மார்டின் யார் என்று கேட்டால்… லாட்டரி சீட்டின் முடி சூடா மன்னன் சண்டியாகோ மார்டின். இவர் கடந்த தேர்தலில் திமுகவுக்கு 500 கோடி ரூபாய் பணத்தை கொடுத்து உதவியுள்ளார். ஆட்சி அமைந்த உடனே தமிழ் நாட்டில் தனது லாட்டரி சீட்டை விற்க்க அனுமதி தரவேண்டும் என்று நிபந்தனை போட்டுள்ளார்.

500 கோடியை பெற்றுக் கொண்ட திமுக ஆட்சிக்கு வந்ததும், இவரை கண்டு கொள்ளவே இல்லை. வாங்கிய பணத்தையும் ஆட்டையை போட்டு விட்டது. இதனால் தனது மருமகனை குறைந்த பட்சம் ஒரு MP யாக உயர்த்த மார்டின் முனைந்தவேளை. இவரிடம் சொல்ல முடியாத அளவு பணம் இருக்கிறதே , இவரது மருமகனான ஆதவ் அரசியலுக்கு வந்தால், திமுகாவுக்கே தண்ணி காட்டுவார், உதய நிதிக்கே போட்டியாக மாறக் கூடும் என்று சிலர் அட்வைஸ் சொல்ல. திமுக ஆதவை கை கழுவி விட்டது. இதனால் 2026 தேர்தலில் தனது சொத்தே அழிந்தாலும் பரவாயில்லை திமுகவை தோற்கடிக்காமல் விடமாட்டேன் என்று சபதம் பூண்டார் மார்டின்.

இதன் காரணத்தால் தான், ஆதவ் TVK கட்சியில் வந்து இணைந்தார். சொல்லப் போனால் நடைபெற்ற TVK மாநாடுகள் முழுவதிற்கும் கணிசமான தொகை ஒன்றை செலவு செய்துள்ளார் ஆதவ். மேலும் சொல்லப் போனால் ஆதவுக்கு டெல்லியில் பெரும் செல்வாக்கு இருக்கிறது. அவர் டெல்லியில் காங்கிரஸ் மற்றும் BJP யுடன் நல்ல உறவில் இருக்கிறார். தமிழ் நாட்டில் திமுகவை எதிர்பது என்றால் ஏதாவது ஒரு பெரிய கட்சியின் ஆதரவு வேண்டும் என்பதனை சற்று காலம் தாழ்த்தி TVK தலைவர் விஜய் உணர்ந்துள்ளார். இதனால் இன்னும் சில வாரங்களில் பெரும் அரசியல் காய் நகர்த்தல்கள் இடம்பெற உள்ளது. அதிரடியான மாற்றங்கள் ஏற்பட உள்ளது. பொறுத்திருந்து பார்கலாம் ! அதுவரை அதிர்வு இணைய செய்திகளோடு இணைந்திருங்கள்.

Loading