அஜித் கொடுத்த வாழ்நாள் பரிசு – நெகிழ்ந்துப்போன ஆரவ்!

அஜித்

அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இப்படத்தை முதலில் விக்னேஷ் இயக்குவதாக இருந்தது. அதன் பின்னர் விக்னேஷ் சிவனின் கதை சரியில்லை எனக் கூறி அவரை படத்திலிருந்து நீக்கிவிட்டார்கள்.

தற்போது படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது படத்திலிருந்து வெளிவரும் காட்சிகள் கூட இணையத்தில் வெளியாகி வைரல் ஆகிவிடும். அந்த வகையில் சமீபத்தில் அஜித் மற்றும் ஆரம் இருவரும் காரில் காரில் சென்ற போது மிகப்பெரிய அளவில் விபத்து ஏற்பட்ட ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அது வைரல் ஆகியது.

இந்நிலையில் தற்போது ஒரு சுவாரசியமான தகவல் கிடைத்துள்ளது. அது என்னவெனில் அஜித் உடன் இணைந்து பணியாற்றி வந்த சக நடிகரான ஆரவ் தனக்கு சிறந்த முறையில் ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் சிறந்த முறையில் நடந்து கொண்டதாகவும் அதனால் அவருக்கு ஒரு புதிய பைக் ஒன்றை பரிசளித்துள்ளதாக கூறப்படுகிறது ரேஸ் பைக் ஆன அதன் விலை ரூ. 35 லட்சம் மதிப்புடையது என தகவல் வெளியாகியுள்ளது. அஜித் கொடுத்துள்ள இந்த வாழ்நாள் பரிசை ஆரவ் என்றுமே மறக்க மாட்டார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.