அமெரிக்காவை உலுக்கும் ‘பெரும் இராணுவக் கவிழ்ச்சி! பிறந்த நாளில் மாபெரும் இராணுவ ஊர்வலம்!

உலக கவனத்தை ஈர்க்கும் அதிரடி முடிவை எடுத்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜூன் 14 ஆம் தேதி – தனது 79வது பிறந்த நாளில் – அமெரிக்க இராணுவம் நிறுவப்பட்ட 250வது ஆண்டு விழாவை முன்னிட்டு, மாபெரும் இராணுவ ஊர்வலத்தை நடத்தவுள்ளார்! வைட் ஹவுஸ் இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது. “டிரம்ப், அமெரிக்க வீரர்கள், பணி வகிக்கின்ற ராணுவத்தினர்கள் மற்றும் வீரசாகச வரலாற்றை கௌரவிக்கும் வகையில் இந்த இராணுவ ஊர்வலத்தை நடத்துகிறார்!” என வித் ஹவுஸ் பேச்சாளர் அன்னா கெல்லி தெரிவித்தார்.

இவ்விழாவில் வெடிக்குண்டு விழா (பயர்வொர்க்ஸ்), தேசிய மாலில் விருந்துவிழா உள்ளிட்டவை இடம்பெறவுள்ளன. மேலும், 150 ராணுவ வாகனங்கள், 50 விமானங்கள் மற்றும் 6,600 வீரர்களுடன் கண்கவர் ஊர்வலம் நடத்தப்படும் என அமெரிக்க இராணுவ பேச்சாளர் ஹீதர் ஹேகன் கூறினார். “250 ஆண்டு விழா என்பதால், இந்த நிகழ்வை மேலும் பிரமாண்டமாக்க ராணுவம் பல்வேறு அதிரடி வாகனக் காட்சி, திறமைகள் கண்காட்சி மற்றும் பொதுமக்கள் ஈடுபாடுடன் நடத்த திட்டமிட்டுள்ளோம்,” என்றார் ஹேகன்.

முன்னதாக, தனது முதல் ஆட்சிக்காலத்தில் ஃபிரான்சில் பார்த்த பாஸ்டில் டே ஊர்வலத்திலிருந்து தூண்டலாக டிரம்ப் இதே போன்ற நிகழ்வை நடத்த எண்ணியிருந்தாலும், செலவு $92 மில்லியனாக இருப்பதாக Pentagon அறிவித்ததால், மற்றும் வாகனங்கள் தெருக்களை சேதப்படுத்தும் எனக் கூறியதால், அது கைவிடப்பட்டது. தற்போதும் வாஷிங்டன் மேயர் முரியல் போசர், “மிலிட்டரி டாங்குகள் தெருக்களில் வரவேண்டாம்; வந்தால் சாலை பழுதடையும், அதை சரிசெய்ய கோடிக்கணக்கில் பணம் தேவை,” என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

“நாம் எதையும் கொண்டாடவே மாட்டோம் – இதுவே மாறும்!” – டிரம்ப் வெடிக்கும் பேச்சு

இந்நிலையில், டிரம்ப் நேற்று வெளியிட்ட Truth Social பதிவில், மே 8 ஆம் தேதியை இரண்டாம் உலகப்போரின் வெற்றி நாளாக அறிவித்து, நவம்பர் 11ல் கொண்டாடப்படும் Veterans Day-ஐ முதல் உலகப்போரின் வெற்றி நாளாக மாற்றுவதாக அறிவித்தார். “இரண்டு உலகப்போர்களையும் நாங்கள் வென்றோம். எங்களின் வீரமும் யுத்த மேதைத் தனமும் யாராலும் எட்டப்பட முடியாதது. ஆனால் நாங்கள் எதையும் கொண்டாடுவதில்லை. காரணம் – நமக்குப் பொருத்தமான தலைவர் இல்லை!” எனக் கடுமையாக விமர்சித்தார்.

தற்போதைய ஆட்சி காலத்தில், பல முன்னணி இராணுவ தலைவர்களை பதவிநீக்கம் செய்துள்ள டிரம்ப், தற்காலிக பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்தின் வழிகாட்டலில் புதிய தலைமுறையினரை தெரிவுசெய்துள்ளார். எனினும், இராணுவத்தின் அரசியல் தலையீட்டால் பங்கு மாறும் அபாயம் இருப்பதாக சில ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஊர்வலம் – வெறும் விழா அல்ல; அமெரிக்க அரசியல் மற்றும் ராணுவத்தின் புதிய முகம் வெளிப்படும் ஒரு அதிரடி நிகழ்வு என கணிக்கப்படுகிறது!