கரூர் சம்பவம் நிகழ்ந்து ஏழு நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. த.வெ.க. (TVK) தலைவர் விஜய் இன்னும் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவில்லை. இந்திய உள்துறை அமைச்சர் தொலைபேசியில் பேசிய பிறகும், விஜய் எந்தவிதமான இணக்கத்திற்கும் வரவில்லை. இதுபோக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியும் எந்தப் பலனும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், திமுக பெரும் குழப்பத்தில் உள்ளது.
த.வெ.க.வின் கோட்டைக்குள் என்ன நடக்கிறது? விஜய்யின் அடுத்த திட்டம் என்ன? இனி என்ன செய்யப் போகிறார் என்பது எல்லாமே சஸ்பென்ஸாக இருப்பதால், திமுக தலைமை தலையைப் பிய்த்துக்கொண்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஊடகங்கள் மீதான அழுத்தம் குறித்த தகவல்
தமிழ்நாட்டில் யார் த.வெ.க.வுக்கு ஆதரவாகப் பேசினாலும், உடனே அவர்களைக் கைது செய்து, எச்சரித்து காவல்துறை விடுதலை செய்வதாகக் கூறப்படுகிறது. இதில், பத்து லட்சம் வாசகர்களைக் கொண்ட ஊடகங்களும் சரி, வெறும் ஆயிரம்பேர் வாசகர்களாக இருக்கும் சேனல்களும் சரி, த.வெ.க. பக்கம் நியாயம் இருக்கிறது என்று பேசக் கூடாது என்ற நிலை உள்ளதாம். மாறாக, “41 அப்பாவிகளைக் கொலை செய்த கொலைகாரன் விஜய்” என்று பேசினால், அந்தச் சேனல் தொடர்ந்து இயங்கலாம். இல்லையென்றால், புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நடந்தது போல, அதன் வயரைத் துண்டித்து முடக்கி விடுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
தற்போது, அரசு கேபிள் டி.வி.யில் புதிய தலைமுறை தொலைக்காட்சித் தெரியவில்லை. அதன் வயரைத் துண்டித்து அந்தச் சேனலை திமுக அரசு முடக்கியுள்ளது. இதற்கு ஒரே காரணம், த.வெ.க. விஜய் பற்றி அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியதுதான் என்று பேசப்படுகிறது.
SRM நிர்வாகி பாரிவேந்தர் மீதான அழுத்தம் குறித்த தகவல்
இந்தச் சூழலில், தமிழ்நாட்டின் கல்வித் தந்தை என்று அனைவராலும் அழைக்கப்படும் SRM கல்லூரிகளின் நிர்வாகி பாரிவேந்தர் ஐயாவையும் திமுக விட்டுவைக்கவில்லை என்ற செய்தி பரவுகிறது.
கரூரில் உயிரிழந்த நபர்களின் குடும்ப அங்கத்தவர்கள் யாராவது கல்வி ரீதியாகக் கஷ்டத்தில் இருந்தால், அவர்களின் கல்விச் செலவை SRM கல்லூரி ஏற்றுக்கொள்கிறது என்று ஐயா பாரிவேந்தர் அறிவித்திருந்தார். இதனால், “நீயும் என்ன த.வெ.க.வின் ஆதரவாளரா?” என்று திமுகவினர் வரிந்துகட்டிக்கொண்டு அவரோடு மல்லுக்கட்டிச் சண்டையிட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்ற செய்திகள் பரவத் தொடங்கியுள்ளன.
அரசியல் தாக்கம் மற்றும் எதிர்வினை
மொத்தத்தில், திமுக எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும், அவர்கள் தலையில் அவர்களே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்ளும் விஷயமாக மாறிவருவதோடு, ஒவ்வொரு திமுக ஆதரவாளர்களும் நாளுக்கு நாள் மனம் மாறி வருகிறார்கள் என்பதே உண்மை.
இதுபோக, த.வெ.க. தலைவர் விஜய் அவர்களுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருவதோடு, கரூர் மக்களும் தங்கள் மீதும் தவறு இருப்பதாக ஒத்துக்கொள்கிறார்கள். “பாவம் விஜய் அண்ணாவுக்கு எதுவும் தெரியாது. அவர் நல்லவர்” என்று கூறுகிறார்கள். பல இளைஞர்கள் 2026 தேர்தலில் வாக்கு போடுவதற்காக வாக்காளர் அட்டைகளைப் பதிவு செய்து வருவதும் குறிப்பிடத்தக்க விஷயம்.
பா.ஜ.க. (BJP) மற்றும் காங்கிரஸ் எதனுடனும் கூட்டணி வைக்காமல், த.வெ.க. தனித்தே போட்டியிடும் போலத் தெரிகிறது. அதிலும் கணிசமான வாக்குகளைப் பெற்று த.வெ.க. ஆட்சி அமைக்கப் பெரும் வாய்ப்புகள் உள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது. கரூர் சம்பவம் த.வெ.க. கட்சிக்கு ஒரு பெரும் விளம்பரத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.
தற்போது பதுங்கி இருக்கும் புலி போன்ற விஜய், எப்பொழுது பாயும் என்பது தெரியவில்லை. இது புயலுக்கு முன்னர் இருக்கும் அமைதி போன்றது என்கிறார்கள் அவரோடு நெருங்கிப் பழகும் சிலர். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.