சீமானுக்கு மைக் சின்னத்திலும் பிரச்சனை வித்தியாசமான மைக்கை மெஷினில் ஒட்டுகிறார்கள்!

சீமானுக்கு மைக் சின்னத்திலும் பிரச்சனை வித்தியாசமான மைக்கை மெஷினில் ஒட்டுகிறார்கள்!

நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை கொடுக்காமல், வேறு ஒரு கட்சிக்கு அந்தச் சின்னத்தை கொடுத்தது தேர்தல் ஆணையம். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயக்கும் தேர்தல் ஆணையம், சீமானை வீழ்த்த எடுத்த முதல் நடவடிக்கை இதுதான். உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிப் பார்த்த சீமான் அவர்கள். இறுதியாக மைக் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்தார். மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கிக் கொடுத்த நிலையில்.

இம்மாதம் 19ம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்கு பதியும் எந்திரங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகிறது. அதனை உற்றுநோக்கினால், அதில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கரில் வேறு விதமான மைக் சின்னம் ஒன்று அச்சாகியுள்ளது. சீமான் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த மைக் சின்னம் வேறு. ஆனால் சில மாற்றங்களோடு மைக் சின்னத்தை அச்சடித்துள்ளது தேர்தல் ஆணையம். அப்படி என்றால் எந்த அளவு, மத்திய அரசானது சீமான் கட்சி மீது பயம் கொண்டிருக்கவேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

நடக்கவுள்ள தேர்தலில் 40 இடங்களிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. 20 ஆண்களையும் 20 பெண்களையும் வேட்ப்பாளராக நிறுத்தியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள். ஆனால் சீமான் கட்சிக்கு வாக்குகள் அதிகம் விழுந்துவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு எவ்வளவு கண்ணும் கருத்துமாக இருக்கிறது என்று பாருங்கள் !