கடந்த இரண்டு தினங்களாகச் சமூக ஊடகங்களைத் திறந்தால், தி.மு.க. தொடர்பான சில வீடியோக்கள் தெரிவதை பலர் கவனித்திருப்பீர்கள். இவை அனைத்துமே தி.மு.க. தரப்பால் பணம் கொடுக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட வீடியோக்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. தனிநபர் ஒருவர், தனது தலைவனுக்காக வெளியிடும் வீடியோவுக்கும், தி.மு.க. அரசு பணம் கொடுத்துப் போட வைக்கும் வீடியோக்களுக்கும் இடையே பெரும் வித்தியாசங்கள் உள்ளன. இது போக, தி.மு.க.வே வலிய வந்து வலையில் சிக்கியும் உள்ளது.
விலை உயர்ந்த கடிகாரமும் சிக்கிய தி.மு.க.வும்
உதாரணமாக, இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் லண்டனில் பேசிய விடயங்கள் இருக்கின்றன. ஆனால், கையில் ஒரு டீக் கப்போடு, மிகவும் விலை உயர்ந்த கடிகாரம் ஒன்றை அவர் கட்டியுள்ளார். அதன் விலையே 5 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை இணையவாசிகள் கவனிக்கத் தவறவில்லை. ‘ஸ்டாலின் அங்கிள்’ கட்டியுள்ள கடிகாரத்தைப் பற்றி தற்போது பல வீடியோக்கள் வெளியாக ஆரம்பித்துவிட்டன.
தி.மு.க. என்றும் இல்லாதவாறு ஏன் திடீரெனத் தங்களைப் பற்றித் தாமே வீடியோக்களை எடுத்துப் போட ஆரம்பித்துள்ளது என்று கேட்டால், கடுமையான பின்னடைவை தி.மு.க. சந்தித்துள்ளது என்பதுதான் அதன் பொருள். தி.மு.க.வின் மக்கள் செல்வாக்கு அதள பாதாளம் நோக்கி நகர்கிறது. ‘இந்த TVK விஜய்க்கு எப்படி இவ்வளவு மக்கள் ஆதரவு இருக்கிறது?’ என்று தி.மு.க. தரப்பு ஆராய, ஏதோ ஒரு பொறுப்பற்ற நபர் ‘எல்லாம் சமூக ஊடகங்கள் ஊடாகத்தான் நடக்கிறது’ என்று கூற, உடனே ‘நாமும் அதனைச் செய்வோம்’ என்று களம் இறங்கியுள்ளது தி.மு.க. ஆனால், சமூக ஊடகங்களில் தி.மு.க. போடும் பதிவுகளை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கிண்டல் செய்து (கலாய்த்து) வருகின்றனர்.
விஜய்யின் சமூக ஊடக ஆதிக்கம்
எங்கே பார்த்தாலும் TVK கொடிதான். இன்றைய தினத்தில் தமிழ்நாட்டில் உள்ள சமூக ஊடகங்களில் விஜய் தான் வலம் வருகிறார். இதே நிலை சில மாதங்கள் நீடித்தால் போதும், தி.மு.க.வின் நிலை கேள்விக்குறியாகி விடும். சமூக ஊடகங்களின் சக்தியை நாம் அவ்வளவு குறைத்து மதிப்பிட முடியாது. எகிப்து நாட்டில் நடந்த அரசியல் புரட்சிக்கு பேஸ்புக் (Facebook) ஒரு காரணம். ஜல்லிக்கட்டுப் போராட்டம் வெடிக்க சமூக ஊடகமே காரணம். ஏன், இலங்கையில் ஒரு ஜனாதிபதி நாட்டை விட்டுத் தப்பி ஓடியதே இந்த பேஸ்புக்கால்தான் என்றால் நம்புவீர்களா? ஆம், அதுவும் நடந்தது.
அந்த வகையில், இன்று சமூக ஊடகங்களில் அடிக்கடி பேசப்படும் நபர் மக்கள் மனதில் இடம் பிடிக்கிறார். அதுவும் அந்த நபர் தொடர்பாக அடுத்து அடுத்து வரும் நல்ல செய்திகள், யார் மனதையும் மாற்ற வல்லது என்பதில் சந்தேகமில்லை. இன்று விஜய் வீட்டில் முடங்கிக் கிடந்தாலும், நாளுக்கு நாள் அவரது ஆதரவு பெருகிக் கொண்டே செல்கிறது.
அமைச்சர் அன்பில் மகேஷின் நிலை
அமைச்சர் அன்பில் மகேஷ், தனக்குத் தானே ஒரு வீடியோவைத் தயார் செய்து இன்ஸ்டாகிராமில் இன்று (அக்டோபர் 07) வெளியிட்டுள்ளார். “வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை” என்று தொடங்கும் ஒரு பாடலோடு. ஆனால், கமெண்ட்டுகளில் பார்த்தால், “உன்னை யாருமே கண்டுக்க மாட்டேங்கிறாங்களே” என்று இளைஞர்கள் எழுதி உள்ளனர். ஆம், அவர் எடுத்த வீடியோவில் தனியாக நிற்கிறார். மக்கள் அருகே சென்றாலும், எவரும் வணக்கம் கூட வைக்கவில்லை. இந்த நிலையில்தான் தி.மு.க. தற்போது உள்ளது.
தோல்வி உறுதி என்று ஆகிவிட்டது! இந்த நிலையில், “தலை அளவு வெள்ளம் வந்துவிட்டது; இதில் கூதல் என்ன, குளிர் என்ன?” என்பது போல, மேலும் மேலும் அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறது தி.மு.க. மக்களே இதற்கு முற்றுப் புள்ளியை வைப்பார்கள்.