உன்கூட வாழ முடியாது… விவாகரத்து வரை சென்ற அர்ச்சனா – மகளின் செயல்!

உன்கூட வாழ முடியாது… விவாகரத்து வரை சென்ற அர்ச்சனா – மகளின் செயல்!

2000 காலகட்டத்தின் ஆரம்பத்தில் பிரபல தொகுப்பாளியாக வலம் வந்து கொண்டிருந்தவர் விஜே அர்ச்சனா அவர் சன் டிவியில் தொகுப்பாளியாக தனது கெரியரை துவங்கி பின்னர் ஜீ தமிழில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆகினார். இதனிடையே அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.

குறிப்பாக தனது மகன் சாராவுடன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சூப்பர் மாம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் அவரது மகள் சாராவும் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். தொகுப்பாளினி அர்ச்சனா கடந்த 2004 ஆம் ஆண்டு வினித் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேல் ஆகிய நிலையில் திடீரென தனது கணவரை விவாகரத்து செய்து முடிவெடுத்துவிட்டாராம் அர்ச்சனா.

காரணம் கணவன் – மனைவிக்கு இடையே மனஸ்தாபம் இருந்ததாம். இது குறித்து பேட்டி ஒன்றில், விவாகரத்து செய்த முடிவு செய்தபோது எனது மகள் தான் எங்களை சேர்த்து வைத்தார். ஆம் நீங்கள் ஒருவரை ஒருவர் விட்டு உங்களால் வாழ முடியுமா?என யோசித்துப் பாருங்கள். ஒரு வாரமே உங்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை என எடுத்து கூறி எங்களை மீண்டும் சேர்த்து வைத்ததே என் மகள்தான் என அவர் தன் மகள் குறித்து பேட்டி ஒன்றில் மிகவும் எமோஷ்னலாக பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது