ஆஸ்திரேலியாவின் கோட்டையைக் காலி செய்ய பார்க்கிறதா அமெரிக்கா?

ஆஸ்திரேலியாவின் கோட்டையைக் காலி செய்ய பார்க்கிறதா அமெரிக்கா?

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான கோடிக் கணக்கான டாலர்கள் மதிப்பிலான ‘ஆக்கஸ்’ (AUKUS) அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் குறித்த மறுஆய்வு இன்னும் முடிவடையவில்லை என்று பென்டகனின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு பேரதிர்ச்சி!

  • இந்த மறுஆய்வு முடிந்து, ஒப்பந்தம் பாதுகாப்பானது என சில நாட்களுக்கு முன் ஊடகங்களில் வெளியான செய்திக்கு முரணாக, இந்தத் திட்டம் குறித்து அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தொடர்ந்து பரிசீலித்து வருவதாக, இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான பென்டகனின் மூத்த அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் ஜான் நோ (John Noh) செனட் குழுவிடம் தெரிவித்துள்ளார்.
  • கடந்த ஜூலை மாதமே தொடங்கிய இந்த மறுஆய்வு, இன்னும் ஏன் நீடிக்கிறது என செனட் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
  • இந்த மறுஆய்வு நீடிப்பதால், ஆஸ்திரேலியாவின் நிலைப்பாடு குறித்து அமெரிக்கக் காங்கிரஸ் கமிட்டி தலைவர் “வருத்தமளிக்கும் ஆச்சரியம்” எனத் தனது கவலையைப் பதிவு செய்துள்ளார்.

சிக்கல் என்ன?

  • இந்த ஒப்பந்தப்படி, அமெரிக்கா ஆஸ்திரேலியாவுக்கு ‘விர்ஜினியா-வகுப்பு’ அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை விற்க வேண்டும்.
  • ஆனால், ஆக்கஸ் ஒப்பந்தத்தின் கடமைகளை நிறைவேற்ற, அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் உற்பத்தித் திறனை ஆண்டுக்கு 1.2 இலிருந்து 2.33 ஆக உயர்த்த வேண்டிய அவசியம் உள்ளதாக ஜான் நோ சுட்டிக் காட்டியுள்ளார்.
  • அமெரிக்காவின் கப்பல் கட்டும் தளங்களால், அமெரிக்காவின் தேவைக்கேற்பவே போதுமான நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்க முடியவில்லை என்ற நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எவ்வாறு வழங்கும் என்ற சந்தேகம் வலுக்கிறது.

 

அல்பெனிஸின் பயணம் கைகொடுக்குமா?

அமெரிக்கக் கொள்கையின் இந்த மர்மமான மறுஆய்வு ஆஸ்திரேலியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பெனிஸ் எதிர்வரும் அக்டோபர் 20-ஆம் தேதி அமெரிக்க அதிபரைச் சந்திக்க உள்ளார். அவரது இந்தச் சந்திப்பிலாவது ஆக்கஸ் ஒப்பந்தத்தின் தலைவிதி குறித்து ஒரு தெளிவு கிடைக்குமா என உலக நாடுகள் உற்றுநோக்குகின்றன!

அமெரிக்காவின் ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ (America First) கொள்கை, தனது நட்பு நாடான ஆஸ்திரேலியாவையே கைவிடுமா?

Loading