விளையாட்டு உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இமாலய சாதனை! உலகப் புகழ் பெற்ற கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo), கால்பந்து விளையாட்டில் இருந்து மட்டும் ஒரு பில்லியன் டாலருக்கும் (சுமார் கோடிக்கும்) மேல் ஈட்டி, இந்தச் சாதனையை எட்டிய முதல் வீரர் என்ற வரலாற்றை உருவாக்கியுள்ளார்!
இத்தனை ஆண்டுகாலமாக ஆட்டங்களில் அடுக்கிக் குவித்த கோல்களுக்கு இணையாக, தனது வங்கிக் கணக்கிலும் பணத்தைக் குவித்து, உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் ரியல் மேட்ரிட், மான்செஸ்டர் யுனைடெட் அணிகளின் முன்னாள் வீரரான ரொனால்டோ.
ரொனால்டோவின் இந்த பிரம்மாண்டமான பண வளர்ச்சிக்கு அவரது புகழ்பெற்ற கால்பந்து ஒப்பந்தங்கள் மட்டுமின்றி, அவர் உருவாக்கியுள்ள CR7 பிராண்ட், ஆடம்பர விடுதிகள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடுகளும் முக்கியக் காரணம்.
ஆனால், இந்தச் சாதனையில் சமீபத்தில் சவுதி அரேபியாவின் அல்-நாசர் (Al-Nassr) கிளப்புடன் அவர் செய்துகொண்ட மாபெரும் ஒப்பந்தம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது! இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆண்டுக்கு சுமார் கோடி (200 மில்லியன் டாலர்) வரை வரி இல்லாத ஊதியம் மற்றும் போனஸ்களை அவர் பெறுகிறார்!
லட்சக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் இந்த போர்த்துகீசிய சூப்பர் ஸ்டார், தனது கால்பந்து வாழ்க்கையில் சம்பாத்தியத்தின் மூலம் கோடீஸ்வரர் ஆன முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்று, மற்ற வீரர்களுக்கு எட்ட முடியாத உயரத்தை அடைந்துள்ளார்! இவரது நிகர மதிப்பு இப்போது சுமார் பில்லியன் டாலர் (சுமார் கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.