மக்கள் மத்தியில் எழுச்சி
கரூர்:
கரூர் நெரிசல் சம்பவம் நடைபெற்று 12 நாட்களுக்குப் பிறகு, த.வெ.க (TVK) தலைவர் விஜய் அவர்கள் வீடியோ கால் மூலம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் பேசியுள்ளார். இந்தப் பேச்சின் போது, அனைவரும் தன்னைக் கடிந்து கொள்வார்கள் அல்லது குறை சொல்வார்கள் என்று நினைத்திருந்த விஜய்க்கு, பெரும் ஆறுதல் கலந்த அதிர்ச்சி காத்திருந்தது.
தாயின் ஆறுதல் வார்த்தைகள்
இரண்டு வயது குழந்தையை இழந்த தாய் ஒருவர், விஜய்யுடன் பேசியபோது, “நீங்கள் உடைந்து போய்விட வேண்டாம். தைரியமாக இருங்கள் விஜய்” என்று, அவருக்கே ஆறுதல் கூறியுள்ளார்.
இதன் காரணமாக, பேசிக்கொண்டிருக்கும் போதே சட்டென மனம் உடைந்த விஜய் அவர்கள், கதறி அழுதுவிட்டார். அவரால் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. இதனால் அந்தத் தாயும் அழத் தொடங்கினார். தொடர்ச்சியாக 20 நிமிடங்கள் விஜய் அழுத வண்ணம் இருந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்றைய தினம் கரூர் முழுவதுமே செய்தியாகப் பரவ ஆரம்பித்துள்ளது.
உயிரிழந்தவரின் தாயார் மற்றும் விஜய்யுடன் பேசிய அனைத்துக் குடும்ப உறுப்பினர்களும், “இந்தச் சம்பவத்தில் விஜய் மீது எந்தத் தவறும் இல்லை” என்று திட்டவட்டமாகக் கூறியிருப்பது, த.வெ.க. தலைவர் விஜய் அவர்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
அரசியல் நகர்வும் மக்கள் கருத்தும்
“தன்மேல் இந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கும் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்” என்று விஜய் கருதுகிறார். “ஆண்டுக்கு இரண்டு படம் நடித்தாலே போதும், 500 கோடியைச் சம்பாதித்து விடலாம். அதனைக் கைவிட்டு அவர் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்? பணம் சம்பாதிக்கவா? இல்லையே! மக்களுக்கு ஏதாவது செய்யத் தானே?” என்ற கருத்து கரூரில் பரவலாகப் பேசப்படுகிறது. கரூர் சம்பவத்தைப் பொறுத்தவரை மக்கள் மத்தியில் இரண்டு கருத்துகள் தான் உள்ளன: ஒன்று இது செந்தில் பாலாஜியின் வேலை என்பது; மற்றொன்று காவல்துறையின் கவனக்குறைவு என்பதுதான். எவரும் விஜயைக் குறை சொல்லவில்லை.
தி.மு.க.வின் பின்னடைவும் சபரீசன் அறிக்கைளும்
இந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி, கரூரில் இப்போது தேர்தல் நடந்தால், நான்கு தொகுதிகளிலும் விஜய் அவர்களின் த.வெ.க. கட்சியே வெல்லும் என்று கூறப்படுகிறது.
இதைக் கண்டு அஞ்சிய செந்தில் பாலாஜி அவர்கள், தி.மு.க. தலைமையிடம் சென்று, தனக்கு உடனடியாக அமைச்சர் பதவி வேண்டும் என்றும், அப்படிச் செய்தால் மட்டுமே கரூரில் நிலவும் சூழ்நிலையைச் சரிசெய்ய முடியும் என்றும் கேட்டுள்ளார். இதனால் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை எப்படித் தள்ளுபடி செய்வது என்று தி.மு.க. ஆராய்ந்து வருகிறது என்ற தகவலும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
கரூர் சம்பவத்திற்குப் பின்னர், நாடு தழுவிய ரீதியில் தி.மு.க. பெரும் பின்னடைவைச் சந்தித்து, எஞ்சியிருந்த செல்வாக்கையும் இழந்துள்ளது என்ற அதிர்ச்சிகரமான அறிக்கை வெளியாகியுள்ளது. இதனைச் சொல்பவர் வேறு யாரும் அல்ல, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மருமகனான சபரீசன் தான். அவர் இயக்கும் “PEN” நிறுவனம் தான் ஒரு கருத்துக் கணிப்பை 7 நாட்களுக்கு முன்னர் நடத்தி, ஒரு அறிக்கையைத் தயார் செய்து அதனை முதல்வரிடம் கொடுத்துள்ளது.
எனவே, விஜய் அவர்கள் அடுத்த சனிக்கிழமை கரூர் செல்ல திட்டம் தீட்டியுள்ளார். அங்கே அவருக்கு இரட்டிப்பு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னரை விட மக்கள் கூட்டம் அதிகமாக வந்து விஜய்யை உற்சாகப்படுத்துவார்கள் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.