நேற்றைய தினம், பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி இருந்தது. 9 நிலைகள் மீது தாம் தாக்குதல் நடத்தியதாக இந்தியா அறிவித்துள்ள நிலையில். பாக்கிஸ்தான் புகைப்பட ஆதாரங்களோடு தகவல்களை வெளிப்படுத்தி இருக்கிறது.
இதில் இந்திய போர் விமானமான மிக் 27 சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது மிகத் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. இதேவேளை இந்தியாவின் இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாக பாக்கிஸ்தான் அறிவித்துள்ளது.
தாக்க வந்த இந்திய விமானப்படை விமானங்களில், 5 விமானங்களை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தற்போது பாக்கிஸ்தான் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியா எதனையும் அறிவிக்கவில்லை.
புகைப்படங்களை பாக்கிஸ்தான் வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய விமானப் படை தாக்கக் கூடும் என்று முன்னரே அறிந்துகொண்ட பாக்கிஸ்தான் பல நிலைகளில் , SAM-7 எனப்படும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை பொருத்தி, இந்திய விமானப்படை விமானத்தின் வருகைக்காக காத்திருந்தது என்றும் கூறப்படுகிறது.