உலகுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்: சீனா கையில் எடுத்த ‘அரிய மண்’ ஆயுதம்!

உலகுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்: சீனா கையில் எடுத்த ‘அரிய மண்’ ஆயுதம்!

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடனான வர்த்தகப் போரில், சீனா தனது அதிகாரத்தை உறுதிப்படுத்த அதிரடியான முடிவை எடுத்துள்ளது!

விமானம், மின்சாரக் கார், உயர் தொழில்நுட்ப எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் ராணுவ தளவாடங்கள் உற்பத்திக்கு மிக அத்தியாவசியமான அரிய மண் தாதுக்கள் (Rare Earths) மற்றும் அதன் தொடர்புடைய தொழில்நுட்பங்கள் ஏற்றுமதிக்கு சீனா கடுமையான புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது!

உலகம் முழுவதும் தேவைப்படும் அரிய மண் தாதுக்களில் 70% க்கும் அதிகமாக சீனாவே உற்பத்தி செய்கிறது.

இந்தத் தாதுக்களை சுத்திகரிக்கும் தொழில் நுட்பத்தில் 90% க்கும் மேலாக சீனாவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

இந்த நிலையில், சமாரியம், காடோலினியம், டெர்பியம் போன்ற முக்கிய அரிய மண் தாதுக்கள் மற்றும் அவற்றின் காந்தங்களை ஏற்றுமதி செய்வதற்கு இனிமேல் சீன அரசிடம் சிறப்பு அனுமதி (Special License) பெற வேண்டும் என வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது.

“தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்கவே” இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சீனா கூறினாலும், இது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு விடுக்கப்பட்ட நேரடிப் பொருளாதார மிரட்டல் என்று சர்வதேச நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனால், உலகளாவிய விநியோகச் சங்கிலி (Global Supply Chain) பாதிக்கப்பட்டு, உயர் தொழில்நுட்பப் பொருட்களின் உற்பத்தி ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது!

உலகமே சீனாவை நம்பியுள்ள நிலையில், சீனாவின் இந்த நடவடிக்கை பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது!

இந்தியா உட்பட பல உலக நாடுகள் சீனாவை சார்ந்துள்ளதால், இந்த முடிவின் விளைவுகள் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Loading