சாட்சிகளை பணம் கொடுத்து வாங்கும் திமுக: TVKக்கு எதிராக பேச வைக்கிறது !

சாட்சிகளை பணம் கொடுத்து வாங்கும் திமுக: TVKக்கு எதிராக பேச வைக்கிறது !

கரூர்:

த.வெ.க (TVK) கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் பலரைப் காவல்துறையினர் கைது செய்து வரும் நிலையில், இவர்கள் முன் ஜாமீன் கோரினால் சாட்சிகளைத் திசை திருப்பி விடுவார்கள் என்று கூறி, காவல்துறையினர் ஆட்சேபணை தெரிவித்தனர். இதனால், இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கு முன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்தது. ஆனால், இன்று தி.மு.க-வும் அதன் கீழ் இயங்கும் காவல்துறையினரும், கரூர் சம்பவத்தின் சாட்சிகளை விலை கொடுத்து வாங்கி, த.வெ.க-வுக்கு எதிராகப் பேச வைக்கத் தொடங்கியுள்ளனர்.

இதில், யார் சாட்சிகளை மாற்றுகிறார்கள் என்பது மக்களுக்கு வெளிப்படையாகப் புரிய ஆரம்பித்துள்ளது.

உயிரிழந்த சிறுவனின் தந்தையும், தாயின் திடீர் பேட்டியும்

கூட்ட நெரிசலில் பலியான சிறுவன் பிரித்திக்கின் தந்தை பன்னீர்செல்வம் என்பவர், தனது மகன் இறந்த சோகத்தில் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று நீதிமன்றம் சென்றுள்ள நிலையில், அவரது மனைவி திடீரென ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார்.

அதில், அவர், “சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே குழந்தையையும், என்னையும் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அவர் த.வெ.க. தூண்டுதலின் பேரில் மேல்முறையீடு செய்திருக்கலாம்” என்றும் சந்தேகம் கிளப்பியுள்ளார்.

தி.மு.க. ஆதரவு தொலைக்காட்சி ஒன்று இந்தப் பேட்டியை மறுபடி மறுபடி ஒளிபரப்பி வருகிறது.

தி.மு.க.வின் அரசியல் வியூகம் குறித்த விமர்சனம்

ஒரு தந்தை தனது மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளார். அதே வேளையில், சிறுவர்களைக் கூட்டி வர வேண்டாம் என்று த.வெ.க. தொண்டர்கள் கூறியும், இந்தத் தாயார் தனது மகனை (சிறுவனை) அழைத்து வந்து பலி கொடுத்துள்ளார். அதைப் பற்றி இந்தத் தி.மு.க. தொலைக்காட்சி எதுவும் கேட்கவில்லை.

மாறாக, த.வெ.க. தூண்டுதல் என்று பேசி வருகிறார்கள். ஒட்டுமொத்தத்தில், தி.மு.க. மிகவும் சாதுரியமான திட்டம் ஒன்றைத் தீட்டி, கூட்ட நெரிசலை உருவாக்கி, 41 பேரைக் கொன்று, அதில் ‘பிண அரசியல்’ ஒன்றை நடத்தி வருகிறது. இது போன்ற ஒரு கேடு கெட்ட அரசாங்கத்தை உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாது.

தமிழக மக்கள் இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும். 2026 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க-வை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகி வருகிறார்கள்.

Loading