நீண்ட வார விடுமுறை மற்றும் அரச வைசாக விழாவை முன்னிட்டு அதிகரித்துள்ள பயணிகள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இன்று (மே 9) முதல் விசேட ரயில் சேவைகளை இயக்க இலங்கை ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த விசேட ரயில் சேவைகள் கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் மற்றும் கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் என இரண்டு முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும்.
திணைக்களத்தின் கூற்றுப்படி, மே 9 முதல் மே 13 வரை இந்த கூடுதல் சேவைகள் இயக்கப்படும், இது விடுமுறை மற்றும் பண்டிகை கால பயணிகளுக்கு அதிக வசதியை வழங்கும்.
விசேட ரயில் அட்டவணை பின்வருமாறு;
விசேட ரயில் 01: வெசாக் இரவு விசேடம் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு – 2025.05.09 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் புறப்படும் நேரம் (கொழும்பு கோட்டையிலிருந்து) இரவு 07.30 மணி.
விசேட ரயில் 02: வெசாக் இரவு விசேடம் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு – 2025.05.09 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் புறப்படும் நேரம் (பதுளையிலிருந்து) மாலை 05.50 மணி.
விசேட ரயில் 03: வெசாக் காலை விசேடம் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு – 2025.05.10 மற்றும் 12 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் புறப்படும் நேரம் (கொழும்பு கோட்டையிலிருந்து) காலை 08.55 மணி.
விசேட ரயில் 04: வெசாக் காலை விசேடம் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு – 2025.05.11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் புறப்படும் நேரம் (பதுளையிலிருந்து) காலை 07.05 மணி.
விசேட ரயில் இல. 4021: அதிவேக ரயில் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கு – 2025.05.09, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் புறப்படும் நேரம் (கொழும்பு கோட்டையிலிருந்து) காலை 05.30 மணி.
விசேட ரயில் இல. 4022: அதிவேக ரயில் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு – 2025.05.09, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் புறப்படும் நேரம் (காங்கேசன்துறையிலிருந்து) பிற்பகல் 01.50 மணி.