வெடிமருந்து தொழிற்சாலையில் கோர விபத்து – 19 பேர் மாயம்!

வெடிமருந்து தொழிற்சாலையில் கோர விபத்து – 19 பேர் மாயம்!

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள ராணுவ வெடிமருந்து தயாரிப்புத் தொழிற்சாலையில் பயங்கர வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது! இந்த கோர விபத்தில் சிக்கி 19 பேர் காணவில்லை என அதிகாரிகள் அறிவித்துள்ளதால், அந்தப் பகுதி முழுவதும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

வெடிப்பு எவ்வளவு பயங்கரமாக இருந்தது என்றால், அந்தத் தொழிற்சாலையின் ஒரு பகுதி முற்றிலும் நசுங்கிப் போய்விட்டது! சுமார் 10 மைல்களுக்கு அப்பால் இருந்த மக்கள் கூட இந்த அதிர்வையும் சத்தத்தையும் உணர்ந்ததாகக் கூறப்படுகிறது. சத்தம் கேட்டுப் பதறி எழுந்த மக்கள், தங்கள் வீடு இடிந்து விழுந்தது போல உணர்ந்ததாகக் கண்ணீருடன் கூறுகின்றனர்.

காணாமல் போன 19 பேரும் உயிருடன் இருப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. நிலைமையின் தீவிரம் குறித்துப் பேசிய ஹம்ப்ரிஸ் கவுண்டி ஷெரிஃப், “இது என் வாழ்க்கையில் நான் கண்டதிலேயே மிக மோசமான சம்பவம். அந்த இடம்… விவரிக்க வார்த்தைகள் இல்லை. அது அழிந்துவிட்டது” என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.

தற்போது, மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஆனால், குப்பைகள் மற்றும் எரிந்த பாகங்களால் அந்தப் பகுதி சூழப்பட்டிருப்பதால், மீட்புப் பணியாளர்கள் முன்னேறுவது சவாலாக உள்ளது. இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இந்தச் சம்பவம் ஒரு தற்செயலான விபத்தா அல்லது வேறு ஏதேனும் சதிவேலை உள்ளதா என்றும் விசாரணை நடந்து வருகிறது.

அதிகாரபூர்வமான மரண எண்ணிக்கையை அறிவிக்க முடியாமல் தவிக்கும் நிலையில், காணாமல் போன 19 பேரின் குடும்பத்தினர் கண்ணீருடன் காத்துக்கொண்டுள்ளனர். இந்த பயங்கர விபத்து டென்னசியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Loading