ஐ.நா.வின் தடைகளை தூக்கி எறிந்துவிட்டு, உலக வல்லரசுகளை அச்சுறுத்தும் வகையில், வட கொரியா தனது ராணுவ வலிமையை பறைசாற்றும் பிரம்மாண்டமான ராணுவ அணிவகுப்பை நடத்தியுள்ளது!
இந்த அணிவகுப்பில், உலகிலேயே மிக மோசமானதும், இதுவரை சோதிக்கப்படாததுமான “ஹ்வாசாங்-20” (Hwasong-20) என்று பெயரிடப்பட்ட புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM – Intercontinental Ballistic Missile) வட கொரியா வெளியிட்டு, உலக நாடுகளுக்கு வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளது.
வல்லுநர்கள் இந்த புதிய ஏவுகணையை “அணு ஆயுத மூலோபாயத்தின் மிக சக்திவாய்ந்த அமைப்பு” என்று வர்ணிக்கின்றனர். இது, அமெரிக்க நிலப்பரப்பில் எங்கும் சென்று தாக்கும் வல்லமை கொண்டது என்று அஞ்சப்படுகிறது. மேலும், பல வெடிகுண்டுகளை (Multiple Warheads) சுமந்து செல்லும் திறன் கொண்டது என்றும் கூறப்படுகிறது!
அந்நாட்டின் ராணுவ வலிமையைக் கொண்டாடும் இந்த அணிவகுப்பில், வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் தனது புன்னகை மாறாத முகத்துடன் வீரர்களைப் பார்த்து கையசைத்தார். “எதிரிகளை முறியடிக்க எங்கள் அணு ஆயுத பலத்தை முழுமையாக அணிதிரட்டுவோம்!” என்று சூளுரைத்துள்ளார்.
வட கொரியாவின் இந்த அப்பட்டமான அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் என்ன பதிலடி கொடுக்கப் போகின்றன? உலக அமைதிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் எழுந்துள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கும்?