சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ படத்தில் அதிரடி ஆக்ஷனில் நடித்து வருகிறார். ‘ஜெயிலர்’ முதல் பாகம் ₹600 கோடி வசூலைக் குவித்த நிலையில், இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பு விண்ணைத் தொட்டுள்ளது! சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையில் பிரம்மாண்டமாக உருவாகும் இதில், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் தீயாகப் பரவி வருகிறது.
லோகேஷுக்கு சிக்கலா?
இதற்கு முன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘கூலி’ திரைப்படம் ₹500 கோடி வசூலித்த போதிலும், கலவையான விமர்சனங்களைச் சந்தித்தது. இது லோகேஷுக்கு ஒரு பின்னடைவாகக் கருதப்படும் நிலையில், ரஜினியும், கமலும் இணைந்து நடிக்கும் ஒரு பிரம்மாண்டப் படத்தை லோகேஷ் இயக்குவார் என சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது.
ரஜினியின் ‘அந்த’ பதில்!
ஆனால், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, “நானும் கமலும் இணைந்து நடிப்பது உண்மைதான். ஆனால், இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை” என்று சொல்லி, ஒட்டுமொத்த கோலிவுட்டையும் ஸ்தம்பிக்க வைத்தார்!
இதனால், “அப்படி என்றால், லோகேஷ் கனகராஜுக்கு அந்த வாய்ப்பு இல்லையா?” என்ற கேள்வி காட்டுத் தீயாகப் பரவி, ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது!
திடீர் ட்விஸ்ட்! நெல்சனுக்கு அடித்த ஜாக்பாட்!
இந்த நிலையில் தான், சினிமா வட்டாரத்தில் புதியதொரு பரபரப்பு கிளம்பியுள்ளது. ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பின் போது, இயக்குனர் நெல்சன் ஒரு கதையை ரஜினியிடம் பேச்சுவாக்கில் கூறியுள்ளார். உண்மையில், இந்தக் கதையை ரஜினிக்காக அவர் சொல்லவில்லையாம். ஆனால், நெல்சன் சொன்ன கதையைக் கேட்டு மிரண்டுபோன ரஜினி, உடனே, “கதை சூப்பர் கண்ணா! நாமளே சேர்ந்து பண்ணுவோம்!” என்று சொல்லி, நெல்சனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்!