“இனி இயேசுவின் மீதான ஆணையாக எவரோடும் கூட்டு இல்லை!” – சீமான் ஆவேசப் பேச்சு!

“இனி இயேசுவின் மீதான ஆணையாக எவரோடும் கூட்டு இல்லை!” – சீமான் ஆவேசப் பேச்சு!

2029-ம் தேர்தலிலும் நாம் தமிழர் தனித்துதான் நிற்போம்! கூட்டணிக்கு இடமில்லை – சீமான் அதிரடி பிரகடனம்!

“இனி இயேசுவின் மீதான ஆணையாக எவரோடும் கூட்டு இல்லை!” – சீமான் ஆவேசப் பேச்சு!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எதிர்வரும் தேர்தல்களில் தங்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து அதிரடியான பிரகடனத்தை வெளியிட்டுள்ளார். கூட்டணி குறித்து குழப்பம் வேண்டாம் என்று கூறிய அவர், “இறைமகன் இயேசு மேல் ஆணையாக எவரோடும் கூட்டு கிடையாது” என ஆவேசமாகப் பேசியுள்ளார்.

சீமான் பேசிய முக்கிய அம்சங்கள்:

  • தனித்துவப் பயணம்: “2029 தேர்தலிலும் தனித்து நிற்போம். ஏன் தனித்து நிற்போம்? தனித்துவத்தோடு நிற்போம். நீ வலிமை உள்ளவனாக ஆக வேண்டுமா? தனித்து நின்று போராடு. பிறர் தோள் மீது ஏறி நின்று நீ உயரமானவன் என்று காட்டுவதை விட, தனித்து நின்று உண்மையான உயரத்தைக் காட்டு.”
  • போராட்டக் குணம்: “நாங்கள் ஆக பெரும் தத்துவத்தை தந்த தலைவனின் மக்கள். 20 நாடுகள் எதிர்த்து போர் புரிந்த போதும், துணிந்து நின்று போராடி விடுதலைக்காக நின்ற மறவர்களின் பிள்ளைகள். தோல்வியைக் கண்டு துவண்டுபோகும் பிள்ளைகள் அல்ல. வெற்றியையும், தோல்வியையும் சமமாக மதிக்கக்கூடிய பிள்ளைகள் நாங்கள்.”
  • உடன்பாடு இல்லை: “எங்களுக்கு ரெண்டும் ஒன்றுதான். அதனால் எந்த காலத்திலும் தேர்தல் உடன்பாடு கிடையாது. அதனால் இனிமேல் இறைமகன் இயேசு மேல் ஆணையாக எவரோடும் கூட்டு கிடையாது. அவர் இவரோடு போய்விடுவரா? இவரோடு போய் சேருவாரா? என்று குழப்பிக் கொண்டு இருக்கக்கூடாது.”
  • மிகப்பெரிய கட்சி: “இந்த நிலத்திலேயே மிக பெரிய கட்சி நாம் தமிழர். 234 தொகுதிகளிலும் தொடர்ச்சியாக வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிடும் ஒரே கட்சி நாம் தமிழர். அப்போது எது பெரியது? நாம் தமிழர் கட்சி தான் பெரியது. 8 கோடி மக்களோடு தேர்தல் உடன்பாடு, கொள்கை உடன்பாடு வைத்து நிற்கும் கட்சி நாம் தமிழர்.
  • மக்கள் தான் பாதுகாப்பு: “எனக்கு பாதுகாப்பு கொடு, இசட், ஒய் என்று கேட்பது கிடையாது. எங்களுக்கு பாதுகாப்பு என் மக்கள். என் மக்களுக்கு பாதுகாப்பு அவர்கள் பிள்ளைகள் நாங்கள். நாங்கள் மக்களுக்கானவர்கள், மக்களிடம் இருந்து மக்களுக்காக வந்தவர்கள். அதனால் மக்களோடு தான் உடன்பாடு.

இவ்வாறு சீமான் தன்னுடைய உரையில் ஆவேசமாகப் பேசினார்.

Loading