தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராகவும் வசூல் நாயகனாகவும் உயர்ந்திருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் ஹீரோவாக அறிமுகமான ‘லவ் டுடே’ திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டி சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து வெளியான ‘டிராகன்’ திரைப்படமும் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது.
தற்போது இரண்டு தொடர்ச்சியான 100 கோடி ரூபாய் படங்களைக் கொடுத்திருக்கும் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக ‘LIK’ மற்றும் ‘PR 04’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் அறிமுக இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம்தான் ‘PR 04’. இந்த படத்தில் பிரதீப்புடன் இணைந்து சரத்குமார் மற்றும் மமிதா பைஜு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
பெயரிடப்படாமல் இருந்த இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. பிரதீப் ரங்கநாதனின் நான்காவது திரைப்படத்திற்கு ‘டியூட்’ (DUDE) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் கையில் தாலியுடன், முகம் மற்றும் கையில் காயங்களுடன் தீவிரமான தோற்றத்தில் போஸ் கொடுத்துள்ளார். இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதன் மீண்டும் ஒரு வெற்றிப் படத்தை கொடுப்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.