Posted in

ரஷ்யாவுக்கு பல மில்லியன் அழிவு வைத்த உக்ரைனின் $125 டாலர் ட்ரோன் இதுதான்

கீழே மிகவும் நேர்த்தியான புகைப்படங்களை இணைத்துள்ளோம் பாருங்கள்

காலக் கொடுமை என்று தான் சொல்லவேண்டும். வெறும் 125 டாலர் பெறுமதியான ட்ரோனை வைத்து, ரஷ்யாவின் மிக முக்கிய ஆயுதக் களஞ்சியம் ஒன்றை வெடிக்க வைத்துள்ளது உக்ரைன் ராணுவம். ரஷ்ய உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள இந்த ரஷ்ய ஆயுதக் களஞ்சியத்தில் இருந்து தான், உக்ரைன் நோக்கி முன்னேறும் படைகளுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு வந்தது.

இன் நிலையில் வெறும் RPG குண்டின் முன் பகுதியை அவசரமாக ஒரு ட்ரோனில் பொருத்தி, போதாக் குறைக்கு அதில் கமராவையும் பொருத்திய உக்ரைன் ஊடுருவும் படை. அதனை உடனே இயக்க ஆரம்பித்துள்ளார்கள். அது பறந்து சென்று ஆயுதக் களஞ்சிய கட்டத்தினுள் செல்வதும், பின்னர் முட்டி மோதி வெடிப்பதும் துல்லியமாக வீடியோவில் உள்ளது.

இதனால் ஆயுதக் களஞ்சியம் வெடித்து தீ பற்றி எரிய ஆரம்பித்தது. யாரும் அருகே சென்று தீயை அணைக்க முடியாது. தப்பினோம் பிழைத்தோம் என்று தலை தெறிக்க ரஷ்ய ராணுவம் அங்கிருந்து ஓடும் காட்சியையும், மற்றுமொரு வேவு பார்க்கும் ட்ரோன் வீடியோ பிடித்துள்ளது. இந்த களஞ்சிய சாலை வெடித்ததில் பல மில்லியன் டாலர்கள் ரஷ்யாவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

கீழே மிகவும் நேர்த்தியான புகைப்படங்களை இணைத்துள்ளோம் பாருங்கள். உக்ரைன் ராணுவம் எப்படிச் செயல்படுகிறது என்பது ஒரு ஆச்சரியமான விடையம் தான்.