கடை வரிசையில் பரவிய தீ – ஆர்மர் வீதியில் அவசர நிலை

கொழும்பு, ஆர்மர் வீதியில் பிசிசி பாலத்திற்கு அருகில் உள்ள வரிசையான கடைகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு தீயணைப்பு படையினர் தகவலின்படி, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.