உலகை அதிர வைத்த விமான நிறுவனம்: கசிந்தது 5 மில்லியன் பயணிகளின் ரகசியத் தகவல்கள்!

உலகை அதிர வைத்த விமான நிறுவனம்: கசிந்தது 5 மில்லியன் பயணிகளின் ரகசியத் தகவல்கள்!

ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய விமான நிறுவனமான காண்டாஸ் (Qantas), தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சைபர் தாக்குதலில் திருடப்பட்ட 5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகளை சைபர் குற்றவாளிகள் டார்க் வெப் (Dark Web)-பில் கசியவிட்டுள்ளனர்!

 

என்ன நடந்தது? பீதியில் வாடிக்கையாளர்கள்!

கடந்த ஜூன் மாதம், காண்டாஸின் வாடிக்கையாளர் தொடர்பு மையங்களில் பயன்படுத்தப்பட்ட மூன்றாம் தரப்பு தளத்தை (Third-party platform) குறிவைத்து ஒரு மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது, சுமார் 57 லட்சம் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டது கண்டறியப்பட்டது.

அப்போது, காண்டாஸ் நிறுவனம் “எங்கள் சிஸ்டம் பாதுகாப்பாக உள்ளது; பணத் தகவல்கள் திருடப்படவில்லை” என்று உறுதி அளித்திருந்தது. ஆனால், ஹேக்கர்கள் விதித்த மிரட்டிப் பணம் பறிக்கும் காலக்கெடு முடிந்த நிலையில், தற்போது அந்தத் தரவுகளைக் கசியவிட்டுள்ளனர்.

 

என்னென்ன தகவல்கள் கசிந்தன?

கசிந்த தரவுகளில் வாடிக்கையாளர்களின் முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் அடங்கும்:

  • மின்னஞ்சல் முகவரிகள் (Email Addresses)
  • பிறந்த தேதிகள் (Birth Dates)
  • தொலைபேசி எண்கள் (Phone Numbers)
  • அடிக்கடி விமானத்தில் பயணிக்கும் எண் (Frequent Flyer Numbers)

கடன் அட்டை விவரங்கள் அல்லது பாஸ்போர்ட் தகவல்கள் எதுவும் திருடப்படவில்லை என்று நிறுவனம் கூறினாலும், இந்தத் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி மோசடி கும்பல் புதிய கணக்குகளைத் திறக்கவோ அல்லது அடையாளத் திருட்டில் (Identity Theft) ஈடுபடவோ வாய்ப்புள்ளது என்ற பகீர் அச்சம் எழுந்துள்ளது.

காண்டாஸ் நிறுவனம் சைபர் பாதுகாப்பு நிபுணர்களுடன் இணைந்து செயல்படுவதாகவும், திருடப்பட்ட தரவுகள் மேலும் பரவுவதைத் தடுக்க நீதிமன்றத் தடை உத்தரவைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

13

எச்சரிக்கை!

இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் அனைவரும் சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் அல்லது அழைப்புகள் வந்தால் கவனமாக இருக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கோட்டையை உடைத்த சைபர் கிரிமினல்கள்! உங்கள் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருக்கிறதா?

Loading