டுபாயில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு கிளவுட் சீடிங் காரணமா cloud-seeding ?அதிரும் உண்மைகள் !

டுபாயில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு கிளவுட் சீடிங் காரணமா cloud-seeding ?அதிரும் உண்மைகள் !

டுபாய் நாட்டில், கிளவுட் சீடிங்(cloud-seeding) என்ற ஒரு பொறிமுறையைப் பாவித்து, செயற்கையாக மழையை வரவளைப்பது வழக்கம். விமானம் ஒன்றை, சுமார் 30,000 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க விட்டு, எரியும் உப்பு என்று அழைக்கப்படும் ஒரு உப்பை தூவுவார்கள். அது மிக அடர்த்தியான (கன மேகங்களை) தோற்றுவிக்கும். அத்தோடு அருகே உள்ள ஏனைய மேகங்களையும் ஒரு இடத்திற்கு வரவளைக்கும். பின்னர் அந்த குறித்த கன மேகம் மழையாக மாறும்.

ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர், டுபாயில் கடும் மழை பெய்தது. 18 மாதங்களில் பெய்யவேண்டிய மழை, 24 மணி நேரத்தில் பொழிந்து தள்ளியதால் வரலாறு காணாத, பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதற்கு டுபாய் அரசே காரணம் என்று கூறப்படுகிறது. வானில் தூவவேண்டிய அளவு உப்பை இவர்கள் சரியாக தூவாமல், மிக மிக அதிகமாக பாவித்து விட்டதாகவும். பொதுவாக அன்றைய தினம், டுபாய் நாட்டுக்கு மேலே உள்ள மேகங்களின் கன அளவை அவர்கள் சரியாக கணிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதன் காரணத்தால், மிகக் கடுமையான மழை பொழிய ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகிறது. இல்லை என்றால் பாலைவன நாட்டில் இப்படி ஒரு மழை பொழிய வாய்ப்பே இல்லை என்கிறார்கள் சில விஞ்ஞானிகள். எது எப்படி இருந்தாலும் டுபாய் அரசு உதனை மூடி மறைத்து விட்டதாக சில விஞ்ஞானிகள் தற்போது குற்றம் சுமத்தி உள்ளார்கள்.