படு தோல்வியடைந்த இந்தியா: யுத்த நிறுத்தம் ஊடாக எல்லாவற்றையும் மறைக்கிறது ? X-ray report

இந்திய பகுதிக்குள் தீவிரவாதிகள் தாக்கியதில் , 27 இந்தியர்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக மோடி அரசு உடனே ஒரு நடவடிக்கை எடுக்க முனைந்தது. இன்னும் சொல்லப் போனால், இந்தியாவில் பல மாநிலங்களில் ஆழும் BJP கட்சி தனது செல்வாக்கை இழந்து வரும் நிலையில். அதனை தூக்கி நிறுத்தவேண்டிய கடைப்பாட்டில் மோடி அரசு இருந்தது.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய மோடி அரசு, உள்ளூர் அரசியலுக்காக பாக்கிஸ்தானுடன் மோதுவது என்ற முடிவை எட்டியது மிகவும் முட்டாள் தனமான காரியம். அதுபோக பாக்கிஸ்தான் வான் பாதுகாப்பு பற்றி சரியாக மதிப்பிடவில்லை. அவசரமாக எடுத்த பல முடிவுகள், இந்தியா 5 போர் விமானங்களை இழக்க நேரிட்டது. மேலும் சொல்லப் போனால் சுமார் 50 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டும் உள்ளார்கள். இது போக இலகுரக் 2 ஹிலிகப்டர்களையும் இந்தியா இழந்துள்ளது.

தனது எல்லைக்குள் வரட்டும் அதன் பின்னர் தாக்குதல் நடத்தலாம் என்று காத்திருந்த பாக்கிஸ்தானுக்கு உண்மையில் இந்தப் போரில் வெற்றி என்பதே உண்மை நிலை. ஆனால் மிகவும் அவசரமாகவும், பாக்கிஸ்தனை மிகவும் குறைத்து மதிப்பிட்டு இந்தியா தாக்க முனைந்தது , பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வேறு வழியின்றி, யுத்த நிறுத்தத்திற்கும் இந்தியா ஒப்புக்கொள்ள வேண்டிய நிலை தோன்றியுள்ளது.

பாக்கிஸ்தானுக்கு சீனா உடனே ஆயுதங்களை அள்ளி வழங்க ஆரம்பித்து விட்டது. இதனால் இந்தியா மோதினால் கூட பயன் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இதன் காரணத்தால் தான் இந்தியா இந்த யுத்தத்தில் படு தோல்வியடைந்துள்ளது. வேறு வழி இன்றி , சமரசமாக போகலாம் என்ற முடிவை எட்டியுள்ளது.