இயக்குனர் சங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கு அண்மையில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ரோகித் என்ற கிரிக்கெட் பறிற்சியாளருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் இந்த திருமணம் சில மாதங்களிலேயே விவாகரத்தில் முடிந்து விட்டது.
அதன் பின்னர் மறுமணம் செய்து வைக்க முடிவு செய்த சங்கர் தற்போது தனது உதவி இயக்குனரான தருண் கார்த்திகேயனுக்கு தனது மகளை மணமுடித்து வைத்திருக்கிறார். ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்ற இந்த திருமணத்தில் பல்வேறு திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர். பிரமாண்டமாக நடைபெற்ற இந்த திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது.
இந்நிலையில் இந்த திருமண மேடை வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட மேடை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதாக எல்லோரும் கூறி வருகிறார்கள்.