பிரித்தானிய தலைநகர் லண்டனில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதாக அன் நாட்டின், சுகாதார மையம் தெரிவித்துள்ளது. சாதாரண இருமல் இருந்தால், காச்சல் மற்றும் தலை வலி இருந்தால் உடனே கொரோனா டெஸ்ட் செய்து பார்க்குமாறு NHS வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன் தேவை ஏற்படின், முக கவசங்களை உடனடியாக பாவிக்குமாறு, அரசு தெரிவித்துள்ளது.
மக்கள் பயணிக்கும் பேருந்துகள், ரயில் மற்றும் விமான நிலையங்கள் என்று சகல இடங்களிலும் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை பிரிட்டன் சுகாதார துறையால் விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் கோடை காலம் ஆரம்பிக்க உள்ளதால், கொரோனா தொற்று வெகுவாகப் பரவக் கூடும் என்று கூறப்படுகிறது. குளிர் காலத்தில் சற்று குறைவடைந்த கொரோனா தொற்று, கோடை காலத்தில் பன்மடங்காக அதிகரிக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே பிரித்தானியாவில் சுமார் 1 லட்சத்தி 24,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் ஒரு பெரிய இடர் வராமல் இருக்க அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்க இறங்கியுள்ளது.