இன்று பல மாவட்டங்களில் கடும் வெப்பம் – பொதுமக்கள் உஷார்!

மன்னார், பேசாலை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 200 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவை இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது. இந்த நடவடிக்கையில், கஞ்சா கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

வடமத்திய கடற்படை கட்டளையின் SLNS கஜபா கப்பலால் இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த வீதி மதிப்பு 87 மில்லியன் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் என்று கடற்படை குறிப்பிட்டுள்ளது.