இந்தியாவின் 5 விமானங்கள் சுடப்பட்டதால் பிரான்ஸ் Rafale- கம்பெனி பெரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது !

மே மாதம் 7ம் திகதி அதிகாலை சுமார் 4 மணிக்கு, பேஜிங்கில் இருந்து வந்த சீன தூதுவர் ஒருவர், பாக்கிஸ்தானில் இருக்கும் சீன அதிகாரிகள் சிலரை அழைத்துக் கொண்டு, பாக்கிஸ்தான் வெளிநாட்டு அமைச்சர் Mohammad Ishaq Dar, சந்தித்துள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. காலை 4 மணிக்கு முன்னர் தான் இந்திய விமானங்கள் பாக்கிஸ்தானுக்குள் ஊடுருவி சில தளங்களை தாக்க முற்பட்டது. ஆனால் இந்தியா பாவித்த பிரான்ஸ் நாட்டின் ராபிஃல் விமானங்களில் 3 விமானத்தை பாக்கிஸ்தான் சுட்டு வீழ்த்தியது. இன்றுவரை இது தொடர்பாக இந்தியா வாயே திறக்கவில்லை.

இந்திய விமானங்கள் 3 சுட்டு வீழ்த்தப்பட்ட சில மணி நேரங்களில் எல்லாம், சீன தூதுவர் ஒருவர் பாக்கிஸ்தானுக்கு தனி விமானம் மூலம் வந்து பாக் வெளிநாட்டு அமைச்சரை சந்தித்து. மேலதிக ஆயுத உதவிகளை தாம் செய்ய உள்ளதாக கூறியுள்ளார். இதேவேளை சீன தயாரிப்பான J10C விமானம், இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்தியது தொடர்பாக தனது வாழ்த்துக்களையும் சீன தூதுவர் தெரிவித்துள்ளார் என்ற விடையங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கசிய ஆரம்பித்துள்ளது.

இந்திய விமானங்கள் சுடப்பட்டது தொடர்பாக FRANCE-24 என்ற TV நிலையம், ரஃபிள் விமான கம்பெனியை தொடர்பு கொண்டு கேள்விகள் கேட்டதற்கு அந்த கம்பெனி எந்த ஒரு பதிலையும் கூற மறுத்துவிட்டது. ஆனால் குறித்த கம்பெனி தற்போது, தனது ராஃபிள் விமானங்களை மேன்பைப் படுத்த , தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சீனாவின் தொழில் நுப்பத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியாகவே இது பார்கப்படுவதோடு. பிரான்ஸ் நாட்டு தயாரிப்பான ராஃபிள் போர் விமானங்களை வைத்திருக்கும் நாடுகள் வயிற்றில் புழியைக் கரைக்கும் விடையமாக இது மாறிவிட்டது என்பதே உண்மை நிலை. மேலும் சொல்லப் போனால், அமெரிக்காவின் அதி நவீன F35 ஸ்டெலத் விமானம் கூட, J10C க்கு முன்னால் தாக்குப் பிடிக்குமா என்பது பெரும் கேள்விக் குறி.

சீனா J10C விமானத்தை சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் விற்பனை செய்துள்ளது. ஆனால் தற்போது சீனாவிடம் இந்த J10C ஐ விட மேம்படுத்தப்பட்ட பல விமானங்கள் உள்ளது. J23 விமானம் படு பயங்கரமான விமானமாக கருதப்படுகிறது. இதேவேளை HQ-9 எனப்படும் சீன வான் பாதுகாப்பு கட்டமைப்பை, சீனா பாக்கிஸ்தானுக்கு கொடுத்து இருந்தது. ஆனால் இந்த HQ 9ல் பல கோளாறுகள் இருக்கிறது. காரணம் இந்தியா அனுப்பிய பல ட்ரோன்கள் பாக்கிஸ்தானில் விழுந்து வெடித்துள்ளது. ஆனால் அதனை சரியாக இந்த HQ-9 சுட்டு விழ்த்தவில்லை.

எனவே இந்தியா போர் விமானங்களை அனுப்புவதை விட ட்ரோன்களை அனுப்பி பாக்கிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி இருந்தால், பல நிலைகளை அழித்து இருக்க முடியும். இருந்தாலும் இந்தியாவிடம் போதிய ட்ரோன்கள் இல்லை. தற்போது தான் இந்த வீக் பாயிண்டை அறிந்து கொண்ட இந்தியா, உடனடியாக பெங்களூரில் உள்ள நிலையம் ஒன்றின் ஊடாக பல ட்ரோன்களை தயாரிக்க ஆரம்பித்துள்ளது.